டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அரசின் தவறான திட்டமிடலுக்கு கிடைத்த பரிசு.. பாதாளத்தில் ஜிடிபி.. ராகுல் காந்தி கிண்டல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடியின் மோசமான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை காரணமாக இந்தியாவின் ஜிடிபி பாதாளத்திற்கு சென்றுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

2020-2021ன் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 23.9% சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஜிடிபி சரிவை இந்திய சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்தியா அதிகாரபூர்வமாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Modi Govt’s ‘well-planned fight’ against Covid has put India in an abyss of says Rahul Gandhi

இந்த நிலையில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சரிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார் அதில், கொரோனாவிற்கு எதிராக பிரதமர் மோடியின் மோசமான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை காரணமாக இந்தியாவின் ஜிடிபி வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதாளத்திற்கு சென்றுள்ளது.

கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!

1. வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஜிடிபி வளர்ச்சி 24% சரிந்துள்ளது. 2. மொத்தம் 12 கோடி வேலைகள் காலியாகி உள்ளது. 3. மொத்தமாக 15.5 கோடி ரூபாய் கூடுதல் லோன் எடுக்கப்பட்டுள்ளது. 4. தினமும் உலகிலேயே அதிக அளவில் இந்தியாவில்தான் கொரோனா கேஸ்கள் வருகிறது.

Modi Govt’s ‘well-planned fight’ against Covid has put India in an abyss of says Rahul Gandhi

ஆனால் இந்திய அரசு மற்றும் மீடியாவை பொறுத்தவரை இந்தியாவில் எல்லாம் நன்றாக இருக்கிறது, என்று கிண்டாலாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். தனது இன்னொரு டிவிட்டில் யுனிலிவர் நிறுவனத்தின் சிஇஓ ஜோப் பேட்டியை பகிர்ந்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Modi Govt’s ‘well-planned fight’ against Covid has put India in an abyss of says Rahul Gandhi

அதில், இந்தியாவில் பலருக்கு வேலை கொடுக்கும் பெரிய நிறுவனங்களில் ஒன்றான யுனிலிவர் நிறுவனமே இந்திய நிலையை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறிவிட்டது . கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதால் அவர்களே இப்படி கூறி விட்டனர். இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், எதிர்காலத்தை பாதுகாக்கவும் அரசு எதுவும் செய்யவில்லை.

மோடி அரசின் திட்டமிடப்படாத லாக்டவுன் காரணமாக ஏற்கனவே மோசமாக இருந்த இந்திய பொருளாதாரம் பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது, என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

English summary
Modi Govt’s ‘well-planned fight’ against Covid has put India in an abyss of says Rahul Gandhi in his tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X