டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டை மொத்தமாக சீரழித்துவிட்டார் மோடி.. எங்கும் எதிலும் தோல்வி.. சீதாராம் யெச்சூரி கடும் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் தோற்று போய் நிற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துவிட்டதாக கடுமையாக சாடியுள்ளார்.

Modi has totally ruined the country.. Failure of everywhere.. Sitaram Yechury attacked

மோடியின் ஆட்சியில் நடைமுறைபட்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்களாலும், நிதி ஒதுக்கீட்டாலும் பிரதமருக்கு வேண்டியவர்கள் மற்றும் அவரது நண்பர்கள் தான் பலனடைந்துள்ளனரே தவிர மக்கள் அல்ல.

பிரதமருக்கு நெருக்கமானவர்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே சுமார் ரூ.5.5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மோடியின் 5 வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

மோடி ஆட்சியில் ஜிடிபிகு பயன்படுத்திய தரவுகள் தவறானது..! உரக்கச் சொன்ன என்.எஸ்.எஸ்.ஓ..!

இது போதாதென்று நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கிவிட்டார் மோடி என யெச்சூரி கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தில் எவ்வளவு தொகையை மத்திய அரசு மீட்டது என்ற கேள்வியையும் யெச்சூரி முன்வைத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகள் 176 சதவீதம் அதிகரித்துள்ளதை மோடியால் மறுக்க முடியுமா என வினவியுள்ளார். எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குவதும் அதிகமாகியுள்ளது.

இந்த தோல்விகளை எல்லாம் மூடி மறைத்து மோடியால் தப்பிக்க முடியாது. நாட்டை சீரழித்துள்ளதற்கான விலையை மோடி கொடுத்தே தீர வேண்டும். இந்த தேர்தலில் மோடியின் அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதி வருகிறார்கள் என கூறியுள்ளார்.

English summary
The Communist Party of India (Marxist) has accused the Prime Minister Narendra Modi of failing in all the sectors and in all areas of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X