டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிப்பதை தனி வேலையாகவே செய்யும் மோடி.. ரன்தீப் சுர்ஜிவாலா தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம், மோடி ஆட்சியில் சிதைக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, நடத்தை விதிமீறல் புகாரில் மோடி, அமித் ஷா ஆகியோர் மீது புகார் கூறப்பட்டதில், தேர்தல் ஆணையர் லவசாவின் கருத்து புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Modi is doing personal work to destroy the sanctity of key organizations.. Randeep Surjiwala

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப லவசா கூறியும், அவருடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை. மாறாக மோடி, அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

அவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்! அவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்!

நாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கின்ற வேலையை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் செய்து வருவதாகவும் கடுமையாக சாடினார் ரன்தீப். தேர்தல் ஆணைய விதிகள் ஒருமித்த முடிவுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு ஏற்படாத போது, பெரும்பான்மை முடிவை ஏற்க சொல்கிறது.

அரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இந்த விதி காலில் போட்டு நசுக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணையர் அசோக் லவசா எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் எழுப்பியுள்ள பிரச்னையால், தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மைக்கும், தேர்தல் ஆணையத்தின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்

English summary
The Congress party has accused the autonomous authority of the constitution of the Election Commission, which has been corrupted by the Modi regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X