டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்தான்.. ஆனால் லோக்சபா தேர்தலில்.. சர்வே முடிவுகள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் என்னதான் காங்கிரஸ் கட்சிக்கு ஏறுமுகமாக இருந்தாலும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என மக்கள் நினைப்பது நரேந்திர மோடியைதான் என நியூஸ் நேஷன் சர்வே கூறியுள்ளது.

அண்மையில் இந்தி பேசும் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. எனினும் ராஜஸ்தான் மக்களின் மனங்களில் பிரதமர் நரேந்திர மோடி நிறைந்துள்ளார்.

நியூஸ் நேஷன் சர்வே ராஜஸ்தானில் உள்ள 25 மக்களவை தொகுதிகளிலும் மக்களின் கருத்துகளை பெற்றது. அதில் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும் என 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வர வேண்டும் என 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

40 சதவீதம்

40 சதவீதம்

இவர்கள் இருவர் தவிர்த்து வேறு நபர்கள் பிரதமராக வேண்டும் என 23 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தானில் 9 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக 16 இடங்களில் வெற்றி பெறும். 40 சதவீத வாக்குகளை பெறும். காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் வெற்றி பெறும்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

காங்கிரஸ் 35 சதவீத வாக்குகளையும் மற்ற கட்சிகள் 10 சதவீத வாக்குகளையும் பெறும். மாநிலத்தில் முக்கிய பிரச்சினையாக வேலையின்மையை பார்ப்பதாக 16 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ஊழல் என 12 சதவீதம் பேரும், பணவீக்கம் என 15 சதவீதம் பேரும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி என 8 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

உண்மை

உண்மை

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியால் 52 சதவீதம் பேர் மகிழ்ச்சி அடைகின்றனர். 48 சதவீதம் பேர் காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். ரபேல் ஒப்பந்தம் குறித்து ராகுலின் விமர்சனம் அடிப்படை ஆதாரமற்றது என 40 சதவீதம் பேரும் உண்மை என 42 சதவீதம் பேரும் எதுவும் சொல்வதற்கில்லை என 18 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

சொல்வதற்கில்லை

சொல்வதற்கில்லை

பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டால் பாஜகவுக்கு நன்மை கிடைக்குமா என கேட்டதில் ஆம் என 51 சதவீதம் பேரும், இல்லை என 35 சதவீதம் பேரும், எதுவும் சொல்வதற்கில்லை என 14 சதவீதம் பேரும் தெரிவித்தனர். சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோடி உரிய பதிலடியை தருகிறாரா என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் ஆம் என்றும், 40 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

English summary
In Rajasthan Modi remains the most preferred PM candidate with 47 per cent votes. Only 31 per cent voted for Congress president Rahul Gandhi in the poll.The survey shows that the BJP is likely to get 16 seats in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X