டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்சியமைக்க உரிமை கோரி வரும் 26ஆம் தேதி ஜனாதிபதியை சந்திக்கிறார் மோடி! அன்றே பிரதமராக பதவியேற்பு?

Google Oneindia Tamil News

டெல்லி: ஆட்சியமைக்க உரிமை கோரி வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளார்.

நாடுமுழுவதும் லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பாஜக காங்கிரஸை விரட்டியடித்து முன்னிலை வகிக்கிறது.

பாஜகவே எதிர்பார்க்காத அளவிற்கு பிரமாண்ட வெற்றி கிடைத்துள்ளது. இதனால் மோடி மீண்டும் பிரதமராக ஆட்சிக்கட்டிலில் அமருவது உறுதியாகியுள்ளது.

மோடி வெற்றி

மோடி வெற்றி

பாஜக கூட்டணி 344 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிரதமர் மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார்.

உரிமை கோருகிறார்

உரிமை கோருகிறார்

இந்நிலையில் வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார். 26ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கும் பிரதமர் மோடி ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

மீண்டும் பிரதமராக

மீண்டும் பிரதமராக

அன்றைய தினமே அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. தொண்டர்கள் முன்னிலையில் பதவியேற்கவும் பதவியேற்பு விழாவுக்கு கூட்டணிக்கட்சிகளை அழைக்கவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்த்து

வாழ்த்து

பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ளார். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Modi meets President Ramnath Govind On 26th of May to stake claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X