டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேக் டைவர்ஷன்.. மோடி பதவியேற்பு விழா.. டெல்லியில் பல சாலைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi oath-taking ceremony Updates: பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி- வீடியோ

    டெல்லி: மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் இமாலய வெற்றி பெற்றதை தொடர்ந்து மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி மீண்டும் இரண்டவது முறை பிரதமராக இன்று பதவியேற்கிறார்.

    இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மோடிக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம் அம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்

    8000 விருந்தினர்கள்

    8000 விருந்தினர்கள்

    மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். மோடியின் பதவியேற்பு விழாவில் 8000 விருந்தாளிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை மட்டுமின்றி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    6 இடங்களில் மாற்றம்

    6 இடங்களில் மாற்றம்

    மோடியின் பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் 6 இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியில் ராஜ்பாத் சாலை, விஜய் சவுக், தெற்கு, மற்றும் வடக்கு அவென்யூ தாராஸ்-ஷிகோக் சாலை, சர்ச் ரோடு ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

    வழிகாட்டல் அடையாளங்கள்

    வழிகாட்டல் அடையாளங்கள்

    மேலும் ராஜ்பாத், டீன் முர்தி மார்க், ரைசினா ரோடு, குருத்வாரா ராக்கப் கன்ஜ் ரோடு, டல்கட்டோரா ரோடு, ஷாந்தி பாத், பண்டிட் பேன்ட் மார்க், கிருஷ்ணா மேனன் மார்க் ஆகிய வழிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மாலை 4 மணி முதல் 9 மணி வரை செல்ல வேண்டாம் என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.விருந்தாளிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து போலீசாரும் புதிய வழிகாட்டல் அடையாளங்களை டெல்லியின் முக்கிய சாலைகளில் வைத்துள்ளனர்.

    அரசு அலுவலகங்கள்

    அரசு அலுவலகங்கள்

    மேலும் ராஷ்டிரபதி பவனில் இயங்கும் அரசு அலுவலங்கள் இன்று முன்கூட்டியே மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்த் பிளாக், சவுத் பிளாக், ரயில் பவன், வாயு பவன், சேனா பவன், டிஆர்டிஓ மற்றுத் ஹட்மென்ட்ஸ் அலுவலகங்கள் இன்று பகல் 2 மணிக்கே மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Modi takes oath as PM of the nation today. Certain roads in Delhi will remain closed to the public between 4 to 9 pm today the Delhi Traffic Police said
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X