டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிட் நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர புதிய முயற்சி.. விழுப்புரம் ஹேமலதாவுக்கு மோடி பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர புதிய முயற்சி செய்த விழுப்புரம் ஹேமலதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு மோடி இன்று காலை உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா முன் கள பணியாளர்களை பாராட்டினார்.

Modi praises Villupuram Hemalatha for her teaching during Corona lockdown

இதைத் தொடர்ந்து மோடி கூறுகையில் தமிழகத்தின் விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியாம் தமிழைப் பயிற்றுவித்து வருகிறார். #COVID19 நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்று தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார்.

புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேடட் வீடியோவாக மாற்றி பென் டிரைவ் மூலம் மாணவர்களிடம் விநியோகம் செய்தார். மேலும் தொலைபேசி வாயிலாகவும் உரையாற்றி வந்தார்.

மனிதாபிமானச் செயல்.. கோவை காயத்ரிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடிமனிதாபிமானச் செயல்.. கோவை காயத்ரிக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி

இதே போல் இந்த படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் திக்ஷா (DIKSHA) தளத்திலே கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன் என மோடி தெரிவித்தார்.

அதே போல் மனிதாபிமான அடிப்படையில் ஊனமாக இருந்த நாய்க்குட்டி நடப்பதற்காக சக்கர நாற்காலி செய்த கோவை காயத்ரியையும் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார்.

English summary
PM Narendra Modi praises Villupuram Hemalatha for her teaching during Corona lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X