டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக அரசை விரும்பாவிட்டாலும் மக்களின் பிரதமர் தேர்வு மோடிதான்.. இந்தியா டிவி கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.. இந்தியா டிவி சர்வே- வீடியோ

    டெல்லி: பாஜக அரசை விரும்பாவிட்டாலும் பிரதமர் நரேந்திர மோடியே பிரதமராக தொடர வேண்டும் என இந்தியா டிவி- சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

    லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா டிவியும் சிஎன்எக்ஸும் இணைந்து 38600 பேரிடம் 193 லோக்சபா தொகுதிகளில் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளன. இவை கடந்த மார்ச் 1 முதல் 7-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

    லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும்.. இந்தியா டிவி சர்வே லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும்.. இந்தியா டிவி சர்வே

    ராகுல்காந்தி

    ராகுல்காந்தி

    இதில் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 47 சதவீதம் பேர் விரும்புகின்றனர். 30 சதவீதம் பேரின் தேர்வு ராகுல்காந்தியாக உள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்தி அளிக்கிறதா என்ற கேள்விக்கு 46 சதவீதம் பேர் ஆம் என்றும் ,44 சதவீதம் பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர்.

    திருப்தி

    திருப்தி

    வேலையின்மை பிரச்சினையால் நாடே பாதிக்கப்பட்டுள்ளதாக 46 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் இதற்கு ஆதரவாக 45 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எனினும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு 60 சதவீதம் பேர் திருப்தி அடைந்துள்ளனர்.

    திறமை

    திறமை

    தற்போது பாகிஸ்தானுடனான பதற்றமான சூழலை கையாளும் விதத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாக 58 சதவீதம் பேரும் திருப்திகரமாக இல்லை என்று 31 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். ஊழலை பொருத்தவரை பாஜக அரசு திறமையாக கையாண்டதாக 51 சதவீதம் பேரும் இதற்கு எதிராக 40 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

    பணமதிப்பிழப்பு

    பணமதிப்பிழப்பு

    வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க மோடி அரசு நடவடிக்கை எடுத்ததா என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் இல்லை என்றும் 30 சதவீதம் பேர் ஆம் என்றும் தெரிவித்துள்ளனர். பணமதிப்பிழப்பு தேசத்தின் பொருளாதாரத்தை பாதித்ததா என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் ஆம் என்றும் 41 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Modi remains nation’s top choice for PM face, NDA govt’s popularity sees downfall, 46% say Modi govt failed in creating jobs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X