டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம்.. பிரதமர் மோடியின் பதிலடி இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi replies to kamal | கமல்ஹாசனின் இந்து தீவிரவாதி பிரச்சாரம், மோடியின் பதிலடி!- வீடியோ

    டெல்லி: நாதுராம் கோட்சே குறித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி தற்போது பதில் அளித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் அரவக்குறிச்சி தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பேசியது பெரிய வைரலானது.

    Modi replies to Kamal Haasan on his remark on Hindu Terrorism

    கமல்ஹாசன் தனது பேச்சில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று குறிப்பிட்டார். கமல்ஹாசனின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    யார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்! யார் வந்தாலும் ஓகே.. மோடி வரவே கூடாது.. பாஜக கூட்டணியில் எழும் முக்கிய தலைவரின் கலகக் குரல்!

    ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகிய இந்து அமைப்புகள் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் பாஜகவும் கமல்ஹாசனின் பேச்சை கண்டித்து இருந்தது. இது போக திரைத்துறையில் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் சிலரும் கமல்ஹாசனுக்கு எதிராக பேசி இருந்தனர்.

    இந்த நிலையில் கமல்ஹாசனின் கருத்துக்கு தற்போது பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்து இருக்கிறார்.

    மோடி தனது பேட்டியில், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதி அல்ல; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது. இந்து மதம் அமைதியை போதிக்கிறது.

    ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை. அதைத்தான் இந்து மதம் மக்களிடம் போதிக்கிறது என்று மோடி கமலின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.

    English summary
    PM Modi replies to MNM chief Kamal Haasan on his remark on Hindu Terrorism.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X