டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் பேரழிவாக இருந்தது... மன்மோகன் சிங் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: நரேந்திர மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் பேரழிவாக இருந்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

நாளை 5 ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மன்மோகன் சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டார் என்று விமர்சித்தார்.

Modis 5-year rule was so disaster, Manmohan Singh commented

கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில், இந்தியா மிகப்பெரிய பிரச்சனைகளைச் சந்தித்துள்ளது. அதிலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசின் ஊழலாகும் என்றார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பாஜக அரசுக்கு உள்நாட்டு வளர்ச்சி குறித்து அக்கறை இல்லை என விமர்சித்த மன்மோகன் சிங், தற்போதைய அரசியல் சூழல் கவலை அளிப்பதாகவும் தெரித்துள்ளார். தற்போது நிலவும் நல்லிணக்கத்திற்கு எதிரான போக்கு கட்டாயம் மாற வேண்டும் எனவும் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை.. வெள்ளை பணத்தை ஒழித்துவிட்டார் மோடி.. ஸ்டாலின் விமர்சனம் கறுப்புப் பணத்தை ஒழிக்கவில்லை.. வெள்ளை பணத்தை ஒழித்துவிட்டார் மோடி.. ஸ்டாலின் விமர்சனம்

இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு காரணம், மோடி அரசின் பொருளாதாரம் குறித்த எதிர்க்கால பார்வை இல்லாதது தான் என்றும் கூறியுள்ளார். அதே போல நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு சரியாக செயல்படவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்றும் கூறிய மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, ஒரு பொய்யை, நூறு முறை மோடி சொன்னாலும் அது உண்மையாகாது என்றார்.

English summary
Former prime minister Manmohan Singh commented that Modi's 5-year rule was so disaster
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X