டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்நிய நேரடி முதலீடு 50% அதிகரிப்பு... மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் பலன்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 57 நாடுகளுக்கு 92 முறை மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

Modis foreign trips, benefits 50% increase in foreign direct investment

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது 5 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களை ஒப்பிடும் போது இது இரண்டு மடங்காகும். பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் அந்நிய நேரடி முதலீட்டில் 50 சதவீதம் உயர்வு காணப்படுகிறது. இந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 193 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு கிடைத்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதாக ஆளும் கட்சி தரப்பில் கூறப்பட்டாலும், இந்தப் பயணங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில், வேலைவாய்ப்பு பெருமளவு குறைந்துள்ளதாக குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடியை பொறுத்தவரை, கடந்த 55 மாதங்களில், 92 நாடுகளில் பயணம் செய்து இருக்கிறார். எனவே, இன்னும் 2 நாடுகளுக்கு பயணம் செய்தால், அதிக வெளிநாடு பயணம் செய்த இந்தியாவின் 2 - வது பிரதமர் என்ற சாதனையை படைப்பார்.

நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து, பின்னர், பிரதமர் ஆன ஒரே தலைவரான வாஜ்பாய், 48 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மன்மோகன்சிங், 10 ஆண்டுகளில் 93 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்தியாவின் 5-வது பிரதமர் சவுத்திரி சரண்சிங், ஒருவர் மட்டுமே வெளிநாடு செல்லாத பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
50% increase in foreign direct investment Due to Modi's foreign trips
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X