டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியும், இமயமலைப் பயணங்களும்.. தன்னைத் தானே அறிந்து கொண்ட தருணங்களும்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Interview: ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்துள்ள பேட்டி- வீடியோ

    டெல்லி: மோடியின் இமயமலைப் பயணங்கள் அவரையே அவருக்கு அடையாளம் காட்டி சுய பரிசோதனைக்குட்படுத்த உதவியது.

    நம் மனசுக்குள் எப்போதுமே பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் ஓடிக் கொண்டே இருக்கும். யாரும் இதற்கு விதி விலக்கு கிடையாது. அதிலும் விடலைப் பருவத்திலிருந்து முதிர்ச்சி அடைந்த நிலைக்கு மாறும்போது நமது எதிர்காலம் குறித்த கேள்விகள், பயம் எழும், ஒரு விதமான பயம் நம் மனதை அப்பிக் கொள்ளும். அது ஒரு அசாதாரண சூழல் ஆகும். நம்மைப் போலவே பிரதமர் மோடியும் இதற்கு விதி விலக்கு அல்ல. மோடிக்கு 17 வயதாக இருக்கும்போது தனது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை அறிய நீண்ட பயணம் தொடங்க முடிவு செய்தார்.

    Modis Journey of self discovery in Himalayan encounters

    ஹியூமன்ஸ் ஆப் பாம்பே-யிடம் மோடி கூறுகையில், "முடிவெடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன். தெளிவில்லாத மன நிலையில் இருந்தேன்" என்றார். "எங்கு போவது என்று தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியவில்லை. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏதாவது செய்தேயாக வேண்டும் என்பது மட்டும் மனதில் உறுதியாக இருந்தது" என்று கூறுகிறார் மோடி.

    நாம் அனைவருமே நமக்கான எல்லைக்குள் சுதந்திரமாக செல்வதையே விரும்புவோம். அமெரிக்காவுக்கோ அல்லது நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஊருக்கோ செலவதையே நம்மில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால் இளம் வயது மோடி என்ன செய்தார் தெரியுமா.. இமயமலைக்கு செல்ல விரும்பினார். காரில் போக விரும்பவில்லை. நண்பர்களை கூட்டிச் செல்ல விரும்பவில்லை. சொகுசாக செல்ல விரும்பவில்லை. அவர் கூறுகிறார், "நான் நீண்ட தூரம் பயணித்தேன். ராமகிருஷ்ண மிஷன் மடத்தில் நேரம் செலவிட்டேன். சாதுக்களையும், சன்னியாசிகளையும் சந்தித்தேன். அவர்களுடன் தங்கினேன். எனக்குள் என்னை உணர ஆரம்பித்தேன்."

    நாம் அனைவருமே நமது ஹாஸ்டல் ரூம் மேட்டுகள் குறித்த நினைவுகள் பசுமையாக இருக்கும். நீண்ட நேர குளியல் உள்பட அனைத்துமே நினைவில் இருக்கும். அதுவும் சுடு தண்ணீரில் குளித்த சுகானுபவம் நிறையவே இருக்கும். ஆனால் மோடி, நடுங்கும் உறைபனிக் குளிரில், இமயமலை ஆற்றில் பச்சைத் தண்ணீரில் குளித்தார். அதுவும் அதிகாலை 3 மணிக்குக் குளிப்பார். நீர் செல்லும் சத்தத்திற்கு மத்தியிலும் அமைதி, ஒருமித்த உணர்வு உள்ளிட்டவற்றைக் கற்றுக் கொண்டார். அடுத்த முறை குளிக்கும்போது இதுபோன்ற குளிர்ச்சிக் குளியலை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

    இளம் வயதிலேயே மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க மோடி விரும்பினார். தனது வாழ்க்கையை ராணுவத்திற்காக தியாகம் செய்ய விரும்பினார். ஆனால் பலரது பேச்சுக்களால் அந்தப் பாதையிலிருந்து மாறி விட்டார். மாறாக உலகம் அவருக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்க காத்திருந்தது. அதை அவர் திரும்பிப் பார்த்தார். இதை மனதில் கொண்டு தனது நீண்ட தூரப் பயணத்தைத் தொடங்கினார். தன்னையே உணரும் நோக்கில் இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். தனது பயணங்களின்போது கற்றதை அவரை மனதில் உருப்படுத்தினார். அவை பின்னாளில் பெரிதும் உதவின.

    "நான் கற்றுக் கொண்டது, உணர்ந்தது, அனுபவித்தது அனைத்துமே இன்று வரை எனக்கு உதவி செய்கின்றன. நாம் அனைவருமே சிந்தனைகளாலும், குறுகிய வட்டத்தாலும் கட்டப்பட்டுக் கிடக்கிறோம் என்பதை நான் உணர்ந்தேன். மிகப் பெரிய அண்டத்துடன் நம்மை ஒப்பிடும்போது நாமெல்லாம் எவ்வளவு மிகச் சிறியவர்கள் என்பதை உணர முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொண்டால், உங்களிடம் உள்ள அத்தனை பிடிவாதமும், முரட்டுத்தனமும் ஓடி விடும். உண்மையான வாழ்க்கை அங்கிருந்து தொடங்கும்".

    "அப்படித்தான் நானும் மாறினேன்" என்று கூறும் மோடி தொடர்ந்து பேசுகிறார்.. "2 வருடங்களுக்குப் பிறகு நான் வீடு திரும்பினேன். இப்போது மனதில் மிகப் பெரிய தெளிவு இருந்தது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழி கிடைத்திருந்தது". என்றார் மோடி.

    மோடியின் சுய ஆய்வுப் பயணம், நாம் அனைவருமே சிந்தனைகள், குறுகிய கட்டுப்பாடுளால் பிணைக்கப்பட்டிருப்பதை அவருக்கு உணர்த்தியது. அதை நாம் அவிழ்த்து விட்டு விட்டால், அதன் பிறகு சாதனைகள் படைப்பதை யாரும் தடுக்க முடியாது என்று அவர் உணர்ந்தார். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார். ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு பிரதமர் மோடி அளித்த 5 பகுதி பேட்டியில், தனது வாழ்க்கை கதையையும், தான் சந்தித்த போராட்டங்கள் குறித்தும் மோடி விவரித்துள்ளார். குஜராத் வெள்ளத்தின்போது அவருக்கு வயது 8. அப்போதே பலருக்கு அவர் உதவினார். அது முதல் 17 வயதில் பல விடைகளைத் தேடி அவர் மேற்கொண்ட பயணம் வரை அவரது வாழ்க்கை மிகப் பெரிய அனுபவங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

    நேரம் ஒதுக்குங்கள்.. உங்களை அறிய முயற்சியுங்கள்.. மோடியின் அறிவுரை! நேரம் ஒதுக்குங்கள்.. உங்களை அறிய முயற்சியுங்கள்.. மோடியின் அறிவுரை!

    English summary
    We've all had moments riddled with self-doubt. The moments laced with uncertainty, the awkward period between adolescence and adulthood when you feel adrift about the direction of your life. So it’s a should be a comfort to know PM Modi was no different from the rest of us. When Modi was 17 he decided to Travel in quest of his purpose in life. "I was undecided, unguided and unclear," the prime minister told Humans of Bombay. "I didn't know where I wanted to go, what I wanted to do and why I wanted to do it. But all I knew, was that I wanted to do something.”
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X