டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்? மோடி சொல்வது இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி கூறும் யோசனை- வீடியோ

    டெல்லி: இயற்கை எரிவாயு எடுப்பதில் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் போதிய அளவுக்கு இந்தியா வருவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    நேற்று நடை பெற்ற சர்வதேச எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவன அதிகாரிகள், இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளத் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட்ட பலரும் பங்குபெற்றனர்.

    [நேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா? விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு]

    ரூபாய் அளிக்கலாம்

    ரூபாய் அளிக்கலாம்

    கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இப்போதுள்ள நடைமுறைப்படி அமெரிக்க டாலர் மட்டுமே அளிக்க வேண்டுமா, அதற்குப் பதில் ரூபாயை எந்தெந்த நிறுவனங்கள் ஏற்கும் வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ந்து சொல்லுமாறு, அவர் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
    ஏனெனில் ரூபாய் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் அது ரூபாய் மதிப்பு சரிவை ஓரளவு சரி செய்துவிடும் என்பதோடு, டாலராக அளிப்பதால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பை ஓரளவு சமாளிக்க உதவும் என்று மோடி கருதுகிறார்.

    இறக்குமதி அதிகம்

    இறக்குமதி அதிகம்

    இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது என்பதால்தான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மிக அதிக அளவில் செலவிட வேண்டிய தேவையுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து எண்ணையை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு மோடி தெரிவித்துள்ளாராம்.

    விலையேற்றம்

    விலையேற்றம்

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து அரசு கவலைப்படுவதாக தெரிவித்துள்ள மோடி, புதிதாக எண்ணெய், எரிவாயு கண்டுபிடிப்பது அவற்றை தோண்டியெடுப்பதற்கு புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வராதது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    நிறுவனங்கள் ஏன் வரவில்லை

    நிறுவனங்கள் ஏன் வரவில்லை

    தேவையான கொள்கை மாற்றங்களை செய்துள்ளபோதிலும், எண்ணை நிறுவனங்கள் இந்தியாவிற்கு வராததற்கான காரணங்கள் என்ன என்பதை பட்டியலிடுமாறு அவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணை தேவைக்காக பிற நாடுகளை நாம் சார்ந்து இருக்கும் வரையில், சர்வதேச அளவில் நமது நாட்டுக்கு வளர்ச்சி ஏற்படாது என்பதை மோடி அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

    English summary
    The heads of oil and gas companies and organisations met Narendra Modi today to discuss the the emerging energy scenario, effects of US sanctions on Iran and volatile oil prices affecting growth.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X