டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி படையின் தளபதி.. வெற்றிக்கனியை பறித்துக்கொடுத்த வலது கை.. அமித்ஷா.. உள்துறை அமைச்சராகிறார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    Narendra Modi Oath: நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ளார்- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் இமாலய வெற்றியை பெற்று தந்த அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சராக பதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 350 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

    இதன் மூலம் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு பின் காங்கிரஸ் கட்சியை சேராத ஒரு நபர் இரண்டாவது முறையாக பிரதமராகிறார் என்ற சாதனையை படைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

    ஒரு சீட் கூட இல்லை... பீகாரில் மண்ணை கவ்விய லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்!! ஒரு சீட் கூட இல்லை... பீகாரில் மண்ணை கவ்விய லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்!!

    அமித்ஷா

    அமித்ஷா

    மோடி மற்றும் பாஜகவின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமானவர், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா. சூறாவளியாய் சுழன்று கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அமித்ஷா.

    தீயாய் வேலை செய்து..

    தீயாய் வேலை செய்து..

    மேற்கு வங்கம் உட்பட பல இடங்களில் அமித்ஷா பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தீயாய் வேலை செய்து வெற்றிக்கனியை பாஜகவுக்கு பறித்து கொடுத்துள்ளார் அமித் ஷா.

    கைகொடுத்த வியூகங்கள்

    கைகொடுத்த வியூகங்கள்

    தேர்தலில் அமித் ஷா மேற்கொண்ட வியூகங்கள் கை கொடுக்க குஜராத்தில் 26 இடங்களையும் அள்ளியது பாஜக காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    முக்கிய துறை?

    முக்கிய துறை?

    இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியமைக்க பேருதவி புரிந்த அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அமித்ஷாவுக்கு பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் நிதித்துறை ஆகிய நான்கு முக்கிய துறைகளில் ஒன்று வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    நிதித்துறை?

    நிதித்துறை?

    தற்போது நிதியமைச்சராக உள்ள அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திரும்பியுள்ளார். உடல்நலக்குறைவால் பாஜக வெற்றிக் கூட்டத்தில் கூட அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை. ஆகையால் அந்த துறை அமித்ஷாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    உள்துறை?

    உள்துறை?

    மேலும் ராஜ்நாத் சிங் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பொறுப்பும் அமித்ஷாவுக்கு வழங்கப்படலாம் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேனிடையே அமேதி தொதியில் ராகுலை தோற்கடித்துள்ள ஸ்மிரிதி இரானிக்கும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    நிச்சயம் ஒரு துறை

    நிச்சயம் ஒரு துறை

    இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவையில் யாருக்கு எந்த துறையை வழங்கலாம் என ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவையில் மாற்றம் வரலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ மோடியின் வலது கையான அமித் ஷாவுக்கு மோடி அமைச்சரவையில் ஒரு துறை நிச்சயம் என்பது உறுதியாகியுள்ளது.

    English summary
    Modi's right hand Amit Shah gets ministry in Modi cabinet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X