
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
டெல்லி: இந்தியாவில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவை.. அது தொடர்பாக வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி கூறினார்.

நமது நாட்டில் தயாராகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைவானது. நமது மருத்துவ கட்டமைப்பை உலகமே பாராட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தடுப்பூசி பற்றிய வதந்திகள் தொடர்ந்து வருகின்றன. அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் நமது நாட்டில் தயாராகும் தடுப்பூசிதான் உலகிலேயே விலை குறைவானது. நமது மருத்துவ கட்டமைப்பை உலகமே பாராட்டுகிறது.
தூய்மை பணியாளர் முத்துமாரிக்கு தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி!
இவ்வளவு பெரிய அளவில் ஒரு தடுப்பூசி இயக்கம் வரலாற்றில் ஒருபோதும் நடத்தப்படவில்லை. உலகில் 3 கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால் நமது நாட்டில் முதல் கட்டத்தில் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில், இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.