டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும் கொரோனாவை ஒழிக்க.. முகக் கவசமும், சமூக விலகல் மட்டும் போதாது.. மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும் கொரோனாவை ஒழிக்க முகக் கவசமும் சமூக விலகலும் மட்டும் போதாது. அதையும் தாண்டி லாக்டவுன் 4ஆவது முறையாக புதிய வடிவத்தில், புதிய விதிமுறைகளுடன் அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Recommended Video

    லாக்டவுன் 4.0 மாறுபட்டதாக இருக்கும் - பிரதமர் மோடி அறிவிப்பு

    கொரோனாவின் தாக்கத்தால் அமலில் உள்ள முழு முடக்கம் வரும் மே 17 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் முழு முடக்கத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஓரளவுக்கு இயல்பு நிலை தொடங்கியுள்ளது.

    தீயாக பரவும் கொரோனா.. தமிழகத்தில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டிய மாவட்டங்கள்தீயாக பரவும் கொரோனா.. தமிழகத்தில் அதீத கவனத்துடன் இருக்க வேண்டிய மாவட்டங்கள்

    உயிரிழப்புகள்

    உயிரிழப்புகள்

    இந்த நிலையில் 5-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறுகையில் கொரோனா நம் வாழ்வில் ஒரு பகுதியாக நீண்ட காலம் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் உயிரிழப்புகள் ஏற்படுவதை விடக் கூடாது.

    முகக் கவசங்கள்

    முகக் கவசங்கள்

    நோய் பரவலை தடுக்க முகக் கவசங்கள் அணிதல் , சமூக விலகலை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கொரோனாவை ஒழிக்க செயல்படுத்த வேண்டும். ஆனால் கொரோனா நம்மை பாதிக்க விடக் கூடாது. அதனால் லாக்டவுன் புதிய வடிவத்தில் புதிய விதிகளுடன் மேலும் நீட்டிக்கப்பட வேண்டும்.

    பிராண்டுகள்

    பிராண்டுகள்

    உள்ளூர் தயாரிப்புகளின் முக்கியத்துவம் குறித்து காலம் நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு பிராண்டுகளும் ஒரு காலத்தில் உள்ளூர் பிராண்டுகளாகவே இருந்தன. ஆனால் அவற்றை மக்கள் ஆதரிக்க தொடங்கியதால் அவை பன்னாட்டு பிராண்டுகள் ஆகின.

    பிரதமர்

    பிரதமர்

    இது இந்தியாவில் ஏன் இன்றிலிருந்த நடக்கக் கூடாது? ஒவ்வொரு இந்தியரும் உள்ளூர் பிராண்டுகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். நாம் கொரோனாவை எதிர்த்து போராட வேண்டும். அதை கடந்து முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

    English summary
    PM Narendra Modi says that Corona will be a part of our lives for a very long time. We will not let it affect us.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X