டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடகிழக்கு மாநிலங்களில் இனச்சுத்திகரிப்பு முயற்சிதான் குடியுரிமை மசோதா: ராகுல் அட்டாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizen Amendment Bill | Rahul Gandhi tweets CAB is an attempt to ethnically cleanse NE India

    டெல்லி; வடகிழக்கு மாநிலங்களில் இனச்சுத்திகரிப்பு முயற்சியாகத்தான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரிகின்றன. அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயாவில் இடைவிடாமல் போராட்டங்கள் தொடருகின்றன.

    Modi-Shah Govt attempts to ethnically cleanse North East, says Rahul Gandhi

    முழு அடைப்பு, சாலை மறியல், பாதுகாப்பு படையினருடன் மோதல் என போர்க்களமாக காட்சி தருகிறது அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்கள். அதேநேரத்தில் வங்கமொழி பேசும் இந்துக்கள் வசிக்கும் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கு பேரமைதியில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ராஜ்யசபாவில் குடியுரிமை திருத்த மசோதா இன்று தாக்கலாகிறது. இதனிடையே இம்மசோதாவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உச்சகட்டமாக, வடகிழக்கு மாநிலங்களில் மோடி-ஷா அரசு மேற்கொள்ளும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகத்தான் குடியுரிமை திருத்த மசோதா என விமர்சித்துள்ளார்.

    இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுடன் இணைந்து வாழும் வடகிழக்கு மாநில மக்கள் மீதான கிரிமினல் தாக்குதல் இது எனவும் சாடியுள்ளார். அத்துடன் வடகிழக்கு மாநில மக்களின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் எனவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

    English summary
    Senior Congress leader Rahul gandhi tweets that, "The CAB is a attempt by Modi-Shah Govt to ethnically cleanse the North East. It is a criminal attack on the North East, their way of life and the idea of India.I stand in solidarity with the people of the North East and am at their service.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X