டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா லாக்டவுன் 6.0: மோடியின் இன்றைய பேச்சின் சிறப்பம்சம் என்ன தெரியுமா

பருவமழை தீவிரமடைந்து சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட காலத்தில் அன்லாக் 2-ல் நாம் நுழைகிறோம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா உடன் போராடும் யாரும் பசியோடு உறங்கக்கூ

Google Oneindia Tamil News

டெல்லி: அரசின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கொரோனா உடன் போராடும் இந்த கால கட்டத்தில் பசியோடு யாரும் உறங்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Recommended Video

    PM Modi address to nation on Unlock 2.0

    இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. வைரஸ் பிறந்த சீனாவை விட இந்தியாவில் பாதிப்புகள் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 ஆவது முறையாக லாக்டவுனை நீட்டித்து மத்திய அரசு வெளியிட்டது.

    Modi speech in unlock Garib Kalyan Yojana extends till November

    இந்த நிலையில் நாட்டு மக்களுக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று பேசினார். சிறிய தவறுக்கு கூட மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் எச்சரிக்கையாக இருங்கள். அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் வர இருப்பதால் மக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பொது முடக்கத்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறோம். உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனா போர் களத்தில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.

    ஒரு இந்தியர் கூட பசியோடு தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக கரீப் கல்யாண் திட்டம் மூலம், அரிசி, கோதுமை, பருப்பு வழங்கியிருக்கிறோம். பொதுமுடக்கத்தின் போது பல மக்கள் அஜாக்கிரதையாக இருந்தனர். இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    Modi speech in unlock Garib Kalyan Yojana extends till November

    முக கவசம் அணியாமல் சென்றதற்காக ஒரு நாட்டின் பிரதமருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 20 கோடி மக்களுக்கு ஜன்தன் வங்கி கணக்குகள் மூலம் ரூ31,000 கோடி கொடுத்திருக்கிறோம்.

    பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சளி காய்ச்சல் தொந்தரவுகள் வருவதால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    கவனிச்சீங்களா.. அந்த பக்கம் சீனா, இந்த பக்கம் கொரோனா.. தில்லா மீசையை முறுக்கிவிட்டு பேசிய மோடி.. செமகவனிச்சீங்களா.. அந்த பக்கம் சீனா, இந்த பக்கம் கொரோனா.. தில்லா மீசையை முறுக்கிவிட்டு பேசிய மோடி.. செம

    தற்போதைய சூழ்நிலையை பொதுமக்கள் சாதாரணமாக கருத வேண்டாம். இந்தியாவில் 3 மாதத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டமான கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Prime Minister extended the Pradhan Mantri Gareeb Kalyan Ann Yojna till 30 November in wake of the COVID-19 pandemic.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X