டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவலாளிகளை தவறாக சித்தரிக்கும் செய்திக்கு வருத்தம் தெரிவித்த மோடி.. கலந்துரையாடலில் உருக்கமான பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: காவலாளிகளை தவறாக சித்தரித்ததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் தெரிவித்தார். நாடு முழுவதும் 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ கான்பிரன்சிங் தொடங்கியது.

நானும் பாதுகாவலன்தான் என்ற பிரசாரத்தை பாஜகவினர் தொடங்கியுள்ளனர். அதை கடந்த சனிக்கிழமை மோடி தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் பாதுகாவலர்கள்தான் என்றார்.

Modi today interact with security guards

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் வாட்ச்மேன்களாக பணியாற்றும் 25 லட்சம் பேருடன் ஆடியோ கான்பிரன்சிங்கில் இன்று தனது உரையாடலை தொடங்கினார். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட் மோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட்

மேலும், 'நானும் காவலாளிதான்' பிரசாரத்தில் இணைந்த பொதுமக்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங்கில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி, 31-ந் தேதி நடக்கிறது. 500 இடங்களில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

20 லட்சம் மக்கள் நானும் காவலன்தான் (#MainBhiChowkidar) என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காவலாளிகளுடனான கலந்துரையாடலில் மோடி பேசுகையில் காவலாளிகளை திருடர்களாக சித்தரிப்பது துரதிருஷ்டவசமானது. காவலாளிகள் அனைவருக்கும் எடுத்துக் காட்டாக திகழ்கின்றனர். காவலாளிகளை தவறாக சித்தரிக்கும் வகையில் சில மாதங்களாக பரவும் செய்திக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

English summary
PM Narendra Modi would interact with people, security guards to intensify the Main Bhi Chowkidar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X