டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்ததற்கு நன்றி.. டிரம்ப், மோடி கூட்டாக பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரு நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மனைவி மெலானியா, மகள் இவான்கா உள்ளிட்டோர் வருகை தந்தனர். நேற்றைய தினம் அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் தங்களது பயணத்தை தொடங்கினர்.

Modi welcomes Trump and his delegations to India

இதையடுத்து வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் தாஜ்மஹாலுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து ராஜ்காட்டில் காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஹைதராபாத் இல்லத்துக்கு சென்ற டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.

அங்கு சிறிது நேரம் இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிகாரிகளை வரவேற்கிறேன்.

இந்த இரு நாட்களும் நீங்கள் அமெரிக்காவில் பிஸியாக இருந்திருப்பீர்கள் என தெரியும். வேலை பளுவுக்கு மத்தியில் இந்தியாவுக்கு வந்துள்ளீர்கள். என் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வந்ததற்கு நன்றி கூறுகிறேன் என்றார் மோடி.

English summary
Narendra Modi in Hyderabad House says that he welcomes Donald Trump and his delegations to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X