டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி.. கார்டியன் பத்திரிகை விமர்சனம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவின் வெற்றியை வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்

    டெல்லி: மோடியின் வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே கெட்ட செய்தி என பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    இதன்மூலம் இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சியமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் இரண்டாவது கட்சி என்ற பெருமையும் இதன் மூலம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

    மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்! மமதா அரசை கவிழ்க்க பாஜக படுதீவிரம்- 100 திரிணாமுல் எம்.எல்.ஏக்கள் தாவ ரெடியாம்!

    முதல் முறை

    முதல் முறை

    இதுவரை காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவில் தொடர்ந்து அதுபோல் ஆட்சியை கைப்பற்றி வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை.

    நல்லதா? கெட்டதா?

    நல்லதா? கெட்டதா?

    இந்திய தேர்தல் முடிவுகளை உலகமே உற்று நோக்கியது.
    பாகிஸ்தான் மீடியாக்கள் இந்திய தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அப்டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் சில டிவி சேனல்கள் மோடி பிரதமரானால் பாகிஸ்தானுக்கு நல்லதா கெட்டதா என விவாத நிகழ்ச்சிகள் நடத்தியதும் தெரிய வந்துள்ளது.

    இனவாத அரசியல் வெற்றி

    இனவாத அரசியல் வெற்றி

    இந்நிலையில் பாகிஸ்தானின் பழம்பெரும் பத்திரிக்கையான டான், மோடி வெற்றியை தலைப்பு செய்தியாகவே கூறியுள்ளது. மோடி மீண்டும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவர் நாட்டின் பாதுகாவலராக பார்க்கப்படுகிறார் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இனவாத அரசியலானது, ஒரு குடியரசின் எதிர்காலத்தை வரையறுக்கும் வயதில் வெற்றிகண்டுள்ளது என்றும் பாகிஸ்தானின் டான் பத்திரிகை தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் ஆத்மா தோற்றது

    இந்தியாவின் ஆத்மா தோற்றது

    அதே நேரத்தில் பிரிட்டனின் தி கார்டியன் பத்திரிகை மோடியின் வெற்றியை விமர்சித்துள்ளது. மோடியின் வெற்றியால் இந்தியாவின் ஆத்மா இருண்ட அரசியலிடம் தோற்றுவிட்டதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    மேலும் மோடியின் இந்த அபார வெற்றியால் இந்தியாவில் உள்ள 19.5 கோடி இஸ்லாமியர்கள் இரண்டாம் குடி மக்களாக பார்க்கப்படுவார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தேர்தல் வரலாறு ஒரு மனிதரால் வெல்லப்பட்டுவிட்டது என்றும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

    உலகுக்கே கெட்ட செய்தி

    உலகுக்கே கெட்ட செய்தி

    5 ஆண்டு ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் விழ்ச்சி அடைந்தாலும் அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார் மோடி. மோடியின் வெற்றி இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் கெட்ட செய்தி என்றும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

    English summary
    Modi wins in India's Parliament election. This is bad news for india and the world said The Guardian.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X