டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

18-ந் தேதி கண்டிப்பா வந்துருங்கள்.. லீவு போட்டுட்டாவது வந்துருங்க- மோடி அழைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    18-ந் தேதி கண்டிப்பா லீவு போட்டுட்டாவது வந்துருங்க- மோடி அழைப்பு- வீடியோ

    டெல்லி: பணிக்கு விடுமுறை எடுத்தாவது வாக்களித்துவிட்டு செல்லுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அவருடைய வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்.

    லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் வாக்களிப்பது முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே உள்ளது. வாக்களிப்பது நமது முக்கிய கடமைகளுள் ஒன்றாகும்.

    அட என்ன ஒரு அதிசயம்.. இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்! அட என்ன ஒரு அதிசயம்.. இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்!

    இணைத்தல்

    இணைத்தல்

    வாக்களிப்பது என்பது இந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளீர்கள் என்பதையும் குறிக்கும். வாக்களிப்பதன் மூலம் நாட்டின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுடன் மக்கள் தங்களை இணைத்து கொள்கிறார்கள்.

    துரதிருஷ்டவசம்

    துரதிருஷ்டவசம்

    முதல் முறையாக வாக்களிப்பவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு உண்டான சூழலை நாம் உருவாக்க வேண்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு சம்பவம் நாட்டில் எங்கேயானும் நடைபெற்றால் அதற்காக வாக்களிக்க மாட்டேன் என நீங்கள் கூறுவது துரதிருஷ்டமான முடிவாகும்.

    தேர்தல் யுத்தம் 2019

    முதலாவது கோரிக்கை

    அந்த வேதனையான சூழலிலிருந்து வெளியே வாருங்கள். வாக்களிக்கச் செல்லுங்கள். உங்களுக்கு நான் 4 வேண்டுகோளை முன் வைக்கிறேன்.

    1. பதிவு செய்யுங்கள்

    உங்கள் வாழ்க்கையின் பெருமையான அடையாளமாக வாக்காளர் அடையாள அட்டையை வழங்குங்கள். வாக்காளர் அடையாள அட்டை இல்லை எனில், உடனே அதற்காக விண்ணப்பியுங்கள். நீங்கள் ஆன்லைனில் www.nvsp.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க முடியும் அல்லது தேர்தல் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்.

    2019-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பானது. ஏனெனில் 21-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியும். வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத தகுதி உள்ளவர்கள் விரைவில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்று வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வளப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    2-ஆவது கோரிக்கை

    2-ஆவது கோரிக்கை

    2. நன்றாக சோதனை செய்யுங்கள்

    வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று உங்கள் பெயர்கள் அதில் உள்ளனவா என்ற சோதனை செய்யுங்கள். உங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் இணையத்திலும் சோதனை செய்யலாம். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் அது குறித்து உரிய அதிகாரிகளிடம் கூறுங்கள். நீங்கள் வேறு முகவரிக்கு மாறியிருந்தால் புதிய முகவரி உள்ள இடத்தில் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என பாருங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை இருக்கும். கடைசி நேரத்தில் அலைகழிய வேண்டாம்.

    மூன்றாவது கோரிக்கை

    மூன்றாவது கோரிக்கை

    3. சரியாக திட்டமிடுங்கள்

    லோக்சபா தேர்தல் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. கோடை காலத்தில் வெளியூர் செல்வதற்கு விசாலமான கால அவகாசம் உள்ளது. எனவே வாக்குப் பதிவு நாளில் உங்கள் சொந்த ஊரில் இருக்க முயற்சியுங்கள். கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல விரும்பினால் வாக்குப் பதிவு நடைபெறும் நாளுக்கு முன் சென்றுவிட்டு திரும்பிவிடுங்கள். ஏதோ காரணங்களுக்காக உங்கள் பணியிடமும் வாக்குச் சாவடி இடமும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் தேசத்தின் எதிர்காலத்துக்காக ஒரு நாள் விடுப்பு எடுத்து வாக்களியுங்கள்.

    4-ஆவது கோரிக்கை

    4-ஆவது கோரிக்கை

    4. எல்லாரையும் அணிதிரட்டுங்கள்

    உங்களுடைய குடும்பம், நண்பர்களை வாக்களிக்க கூறுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். தேவைப்பட்டால் அவர்களை வற்புறுத்தி வாக்களிக்க வையுங்கள். அதிகபட்ச வாக்குப் பதிவு என்றால் வலிமையான ஜனநாயகம் என்று அர்த்தம். வலிமையான ஜனநாயகம் என்றால் வளர்ந்த இந்தியா என்பதாகும். கடந்த சில தேர்தல்களில் பல்வேறு மாநிலங்களில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. அரசியல், தொழில், விளையாட்டு, திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் என வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi on Wednesday reached out to the young voters of India with a blog on his website about how to register their names ahead of the polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X