டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நண்பா! நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    நண்பா! நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்!

    டெல்லி: நான் பிழைக்க மாட்டேன், எனது குடும்பத்தை பார்த்துக் கொள் என டெல்லி தீவிபத்தில் இறப்பதற்கு முன்னர் இளைஞர் ஒருவர் தனது நண்பரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    டெல்லியில் நேற்று அதிகாலை நடந்த தீவிபத்தில் உயிரிழந்த முகமது முஷாரப்தான் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள அனாஜ் மண்டி என்ற வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள், ஆலைகள் உள்ளன.

    இங்கு பைகள் தயாரிக்கும் ஒரு ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் மண்டியிலேயே தங்குவது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் இரவும் தங்கிவிட்டனர்.

    ஆழ்ந்த உறக்கம்

    ஆழ்ந்த உறக்கம்

    இந்த நிலையில் இங்கு திடீரென நேற்று அதிகாலை மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

    குறுகலான இடம்

    குறுகலான இடம்

    சுதாரிப்பதற்குள் தீ வேகமாக பரவியது. மிகவும் குறுகலான இடத்தில் தீப்பிடித்ததால் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்திருந்தன. அதற்குள் இந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    பிழைக்க முடியாது

    பிழைக்க முடியாது

    இந்த விபத்தில் உயிரிழந்த முகமது முஷாரப் (34) என்ற இளைஞர் தீவிபத்து ஏற்பட்ட போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனது நண்பர் மோனு அகர்வாலுக்கு போன் செய்துள்ளார். அப்போது எனது ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் என்னால் உயிர் பிழைக்கமுடியாது. எனவே எனது குடும்பத்தை பார்த்துக் கொள் என கூறியிருக்கிறார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    இதனால் பதறிய மோனு, நம்பிக்கையை இழக்காதே. கட்டடத்தின் ஏதாவது ஒரு வழியிலிருந்து குதித்து விடு தப்பிடு என முஷாரப்பிடம் அறிவுறுத்தியுள்ளார். அப்போது முஷாரப், தீயணைப்பு வாகனங்களின் ஒலியை கேட்டுவிட்டு உதவிக்கு வந்துள்ளனர் என கூறினார். அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு என மோனு உருக்கமாக தெரிவித்தார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    இருவரும் உத்தரப்பிரதேச மாநில தன்டமைதாஸ் பகுதியில் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து பிஜனோரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டதுதான் கடைசி சந்திப்பாகும் என மோனு கண்ணீர்விட்டார்.

    English summary
    Mohammad Musharaf who died in Delhi Fire accidents calls his friend and asked to take care of his family as he couldnt escape from the fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X