டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக, சமாஜ்வாடி, பகுஜனுக்கு கடும் போட்டியாக இருப்பார் பிரியங்கா.. மூட் ஆப் தி நேஷன் சர்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha election 2019: இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்புகள்- வீடியோ

    டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கடும் போட்டியாக இருப்பார் என இந்தியா டுடே கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் களைக்கட்ட தொடங்கிவிட்டது. தொகுதி பேரங்கள், பங்கீடுகள் நடந்து வரும் நிலையில் கூட்டணி பேரங்களும் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை தோற்கடிக்க வியூகம் வகுத்து வருகின்றன.

    என்னவெல்லாம்

    என்னவெல்லாம்

    எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை என்பது அரிதான செயல் என்பதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கின்றன. பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் மகா கூட்டணியை அமைத்து பாஜகவை வீழ்த்தின. அதன்பின்னர் அங்கு என்னவெல்லாமோ நடந்து விட்டது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அதுபோல் உத்தரப்பிரதேசத்திலும் மாநிலத்தின் முக்கியக் கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவை இரண்டு கட்சிகளும் காங்கிரஸை கைக்கழுவின.

    அஜெண்டா

    அஜெண்டா

    இதையடுத்து காங்கிரஸும் தாங்கள் 80 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என தெரிவித்தது. என்னதான் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறும் கட்சி எளிதாக மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்பதே அரசியல் அஜெண்டாவாகும்.

    நேரடி அரசியல்

    நேரடி அரசியல்

    இதை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேச மாநில மக்களுக்கு மிகவும் பரிட்சயமான பிரியங்கா காந்திக்கு மாநில பொதுச் செயலாளர் பதவியை காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது. இதுவரை மறைமுகமாக அரசியல், தேர்தல் பிரசாரம் செய்து வந்த பிரியங்கா நேரடி அரசியலுக்கு வர வழி வகுத்து கொடுத்தது.

    கருத்து கணிப்பு

    கருத்து கணிப்பு

    பிரியங்காவின் நியமனத்தால் பாஜக, எஸ்பி- பிஎஸ்பி கூட்டணி ஆகியவற்றை சமாளிக்க முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைட்ஸ் மக்களின் மனநிலை என்ற கருத்து கணிப்பை நடத்தின.

    பாஜக வாக்குகள்

    பாஜக வாக்குகள்

    அப்போது பாஜகவின் வாக்குகளை பிரியங்கா காந்தி தட்டி பறிப்பாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அந்த கருத்து கணிப்பின் அறிக்கையை இந்தியா டுடே வெளியிட்டது. அதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகியவற்றுக்கு பிரியங்கா காந்தி கடும் போட்டியாக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

    பிரியங்கா போட்டி?

    பிரியங்கா போட்டி?

    சோனியாவின் கோட்டையான ரே பரேலியில் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பதில் பிரியாங்கா போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் இந்த கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    India Today's Mood of the nation poll says that Priyanka Gandhi could give a tough fight to BJP in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X