வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. ஒரே நாளில் 13 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13, 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்னங்க இது! திருமணமான 45 நாளில் 4 மாத கர்ப்பிணியான பெண்! போலீசில் புகாரளித்த உத்தரபிரதேச கணவர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று 12 ஆயிரத்து 847 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 213 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.தொடர்ந்து இரு நாட்களாக 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு கணக்கிடப்பட்ட நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்
கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13 ஆயிரத்து 216 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,32, 83,793 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பலி
கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதால், ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சிறு உடல்நிலை பிரச்னைகள் ஏற்பட்டாலும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,148 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 68,108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி பணிகள் தீவிரம்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 14,99,824 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 196 கோடியை கடந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 4,84,924 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 85,73,95,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.