டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலேயே அதிக கொரோனா நோயாளிகள்.. முதல் ஐந்தில் மூன்று தென்னிந்தியா. ஷாக் தரும் தமிழகம்

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் அதிக நோயாளிகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தில் கர்நாடாகவும் மூன்றாவது இடத்தில் கேரளாவும், ஐந்தாவது இடத்தில் தமிழகமும் உள்ளன. தமிழகம் தினசரி அதிக கொரோனா பாதிப்பில் நேற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,10,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,46,83,242 ஆக உயர்ந்துள்ளது.

தீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி! தீவிரமெடுக்கும் டவ்-தெ புயல்.. விடாமல் பெய்யும் கனமழை.. கர்நாடகாவில் 4 பேர், கேரளாவில் 2 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,077 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,70,321 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் எவ்வளவு

இந்தியாவில் எவ்வளவு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 24 மணிநேரத்தில் 3,62,548 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,07,89,219 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சிகிச்சை

இந்தியாவில் சிகிச்சை

கொரோனா பாதிப்புடன் இந்தியாவில் தற்போது 36,13,509 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் அங்கு உள்ளது. அங்கு இதுவரை 5344063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக நோயாளிகள்

அதிக நோயாளிகள்

ஆனால் அதிக கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெறும் மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு தற்போது 6,05,494 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். நாட்டிலேயே உச்ச கட்ட பாதிப்பும் கர்நாடகாவில் தான் உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அங்கு 41,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு அதிகம் ஆவதில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 960 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தினசரி பாதிப்பு அதிகம்

தினசரி பாதிப்பு அதிகம்

தினசரி அதிக கொரோனா பாதிப்பில் நேற்று தமிழகம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 33658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு நாளில் மட்டும் 303 ஆகும். தமிழகத்தில் தற்போது 207789 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிக நோயாளிகள் சிகிச்சை பெறும் மாநிலங்கள் பட்டியலில் 5வது இடத்தில் தமிழகம் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் ஆகியவை முதல் நான்கு இடத்தில் உள்ளன.

English summary
Karnataka tops the list of states with the highest number of patients in India, followed by Kerala and Tamil Nadu. It is shocking that Tamil Nadu has advanced to the third place in the daily high corona impact yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X