டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: போதையில் வாகனம் ஓட்டினால் இனி 10 ரூபாய் வரை அபாரதம் செலுத்த வேண்டிய நிலை வரும். இதேபோல் தலை கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. ஆயிரம் அபராதம் விதித்துவிடுவார்கள். இதுபோன்ற பல்வேறு சாலை விதிகளை மீறி செயல்படுவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் அம்சங்கள் கொண்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா காலாவதியாகிவிட்டது. இதையடுத்து மீண்டும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி போதையில் வாகனம் ஓட்டுதல், சிறார் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் ஓட்டுதல், அதிவேக பயணம், அதிக சரக்குகளுடன் பயணம் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துளளது.

மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா கடந்த மக்களவையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது. மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில். நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்ததால் இந்த மசோதா காலாவதியானது, இந்நிலையில் மசோதாவை சட்டமாக்கும் முயற்சியை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்படி மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஹெல்மெட் போடாட்டி ரூ.1000

ஹெல்மெட் போடாட்டி ரூ.1000

இதன்படி, இன்சூரன்ஸ் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றால் 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிப்பார்கள். இதேபோல் தலைகவசம் (ஹெல்மெட்) அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் நிறுத்திவைப்பு தண்டனை வழங்கப்படும். இதேபோல் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் வரை அபாரதம் விதிக்கப்படும். செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

3வருடம் சிறை தண்டனை

3வருடம் சிறை தண்டனை

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் இதுவரை எச்சரித்து அனுப்புவார்கள்.இனி சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் அல்லது காப்பாளருக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றம் 3 ஆண்டுசிறை தண்டனை கிடைக்கும். ஒட்டுநர் உரிமத்திற்கான விதிமுறைகளை மீறியவர்களூக்கு 25 ஆயிரம் முதல் ஒரு லடசம் வரை அபராதம் விதிக்கப்படும்.

சிக்னலில் நிற்காவிட்டால் 1000

சிக்னலில் நிற்காவிட்டால் 1000

அதிக வேகத்தில் சென்றால் முன்பு 400 ரூபாய் அபராதம் இருந்தது. இனி ஆயிரம் ரூபாயும், பெரிய வாகனங்களுக்கு 2 ஆயிரமும் அபராதம் விதிப்பார்கள். சிவப்புவிளக்கு எரியும் போது நிற்காமல் வாகனத்தை இயக்கினால் இதுவரை 100 முதல் 300 ரூபாய் அபராதம் இருந்தது. இனி 1000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் இதுவரை 500 ரூபாய் அபராதம் விதிப்பார்கள், இனி 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள்.

உடனே அமலுக்கு வரும்

உடனே அமலுக்கு வரும்

இந்த சட்டம் மக்களவையில் எளிதில் நிறைவேறிவிடும்.மாநிலங்களையில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் உடனே அமலுக்கு வந்துவிடும். எனவே போக்குவரத்துவிதிகளை மீறினால் நிச்சயம் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகள் இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த மசோதா நிறைவேறினால் மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை ஊக்குவிக்கும் என இக்கட்சிகள் கூறுகின்றன.

English summary
Drink driving may now cost Rs 10,000 and driving without licenseRs 5,000, parents of minor drivers could face 3 years jail term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X