டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரவிக்குமார் அதிரடி.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தமிழ் தேவை.. லோக்சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை தமிழிலும் வெளியிடாததற்கு விழுப்புரம் எம்பி விசிகவின் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்கக்கோரி ரவிக்குமார் நோட்டீஸ் ஒன்றையும் அளித்து மக்களவையை திக்குமுக்காட வைத்துள்ளார்.

2 வருஷத்துக்கு முன்னாடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் "இதுநாள் வரை ஆங்கிலத்தில் மட்டுமே நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தன.

இனி, மாநில மொழிகளிலும் அந்த தீர்ப்புகளின் விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்" என்று ஒரு கருத்தை ஆழமாக தெரிவித்திருந்தார்.

விக்கிரவாண்டி, வேலூர்.. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா? விக்கிரவாண்டி, வேலூர்.. அன்புமணிக்கு ராஜ்ய சபா சீட் தர என்ன காரணம் தெரியுமா?

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

வழக்குத் தொடுப்பவர்களுக்கு எளிதாக மொழி புரிவதற்காகத்தான் ராம்நாத் கோவிந்த் இப்படி சொல்கிறார் என்பதன் முக்கியத்துவத்தை அறிந்த மத்திய அரசும், இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஆங்கிலம் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமிஸ், ஒடியா ஆகிய ஐந்து மொழிகளிலும் தீர்ப்பை பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இல்லை

ஆனால் இந்த முதல் பட்டியலில் இந்தியாவின் மூத்த மொழியான தமிழ் இடம் பெறாதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழ் மொழி இல்லாததற்கு தமிழக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முதல்கண்டனமே டாக்டர் ராமதாஸிடம் இருந்துதான் வந்துள்ளது.

டாக்டர் ராமதாஸ்

"உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது" என்றும், "உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்" என்றும் ட்விட்டரில் வலியுறுத்தி உள்ளார்.

கவன ஈர்ப்பு தீர்மானம்

கவன ஈர்ப்பு தீர்மானம்

ஆனால் விழுப்புரம் தொகுதி எம்பி ரவிக்குமாரோ, இது சம்பந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானமே கொண்டு வந்துவிட்டார். "உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில், செம்மொழியான தமிழ் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பது அநீதி" என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அத்துடன், தமிழ் மொழியில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க வலியுறுத்தி நாடாளுமன்ற அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கவன ஈர்ப்பு

கவன ஈர்ப்பு

இதற்கான ஒரு பதிவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். அதில், "உடனே தமிழையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு நோட்டீஸ் அளித்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Vizhpuram MP VCK Ravikumar tweet about Tamil Language and urges SC verdicts to be made in Tamil language also
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X