டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை.. மதுரை.. மதுரை.. நாடாளுமன்றத்தில் மண்ணின் பெருமையை பாடிய சு. வெங்கடேசன்!

பாரம்பரிய நகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என சு வெங்கடேசன் கோரியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கம்யூனிஸ்ட் கட்சியை வெல்ல வைத்த மதுரை மக்கள்..காரணம் இது தான்!

    டெல்லி: இன்றைய பார்லிமென்ட் கூட்டத்தில், மதுரை.. மதுரை.. மதுரை என்ற பெயர்கள் மண்வாசத்துடன் பலமுறை எதிரொலித்ததை கேட்க முடிந்தது. இதற்கு காரணம் புது எம்பி எழுத்தாளர் சு.வெங்கடேசன்தான்!

    தனது ஆழமான எழுத்துக்களால் மாவட்ட மக்களை தன்வசப்படுத்தியவர் வெங்கடேசன். சமுதாய சாடல்கள் அனைத்துமே அவரது எழுத்து, மற்றும் எண்ணங்களில் பிரதிபலிப்பதே இதற்கு காரணம்.

    அதனால் எல்லா வளமும், செல்வசெழிப்பும் நிறைந்த வேட்பாளர்கள் பல கட்சி சார்பில் மதுரையில் நிறுத்தப்பட்டும், எளிமையும் தங்கள் மீது நம்பிக்கையும் வைத்த வெங்கடேனை மக்கள் வெற்றி பெற வைத்து டெல்லிக்கு அனுப்பி உள்ளார்கள்.

    ஒரு தலித் பையனின் குழந்தை வளரக்கூடாது.. 2 மாச கர்ப்பத்தை கலைச்சிட்டாங்க.. குமுறும் தந்தை!ஒரு தலித் பையனின் குழந்தை வளரக்கூடாது.. 2 மாச கர்ப்பத்தை கலைச்சிட்டாங்க.. குமுறும் தந்தை!

    வாழும் நகரம்

    வாழும் நகரம்

    பார்லிமெண்ட்டில் இன்று வெங்கடேசன் பேசிய பேச்சு முழுவதும் மதுரை மணம் கமன்று அடித்தது. "மதுரை வெறும் நகரமல்ல.. அது தமிழ் பண்பாட்டின் தலைநகரம் . திராவிட நாகரீகத்தின் தாயகம். உலகில் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டு இன்றைக்கும் வாழும் நகரமாக இருப்பது மதுரைதான்.

    மதுரை

    மதுரை

    உலகில் வேறு எந்த ஒரு நகரத்திலும் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துக்கள் 20 கிலோமீட்டர் சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கிற ஒரே உலக நகரமாக மதுரை இருக்கிறது.

    பாரம்பரிய நாகரீகம்

    பாரம்பரிய நாகரீகம்

    இந்த நகரம் இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல பண்பாட்டு வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் செலுத்திய நகரமாகும். எனவே மதுரையை உலக பாரம்பரிய நகரமாக - வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்" என்றார்.

    கீழடி நாகரீகம்

    கீழடி நாகரீகம்

    கீழடி நகர நாகரீகத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்களில் முதன்மையானவர் வெங்கடேசன் என்பது நினைவிருக்கலாம். அதுகுறித்த முழுமையான தகவல்களை வெளிக் கொணர்ந்தவரும் வெங்கடேசன்தான்.

    English summary
    CPM MP Su Venkatesan insisted in Lok Sabha that, Madurai should be announced as a historical cultural city
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X