டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு | மோடிக்கு காங்கிரஸ் பதிலடி- வீடியோ

    டெல்லி: ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைஸி இன்று பதவியேற்ற போது ஜெய்ஸ்ரீராம் என முழங்கிய பாஜக எம்பிக்களுக்கு மென்மையான பதிலடியை கொடுத்தார்.

    நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்பிக்கள் நேற்றும் இன்றும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் தமிழக எம்பிக்களும் இன்றைய தினம் பதவியேற்றனர்.

    அவர்கள் அனைவரும் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். 38 தமிழக எம்பிக்களில் சிலர் தமிழ் வாழ்க என கோஷமிட்டனர். அப்போது அவையில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழ் வாழ்க கோஷத்திற்கு எதிராக பாரத் மாதா கி ஜே.. பெரியாருக்கு எதிராக ஸ்ரீராம்! லோக்சபாவில் பரபரப்புதமிழ் வாழ்க கோஷத்திற்கு எதிராக பாரத் மாதா கி ஜே.. பெரியாருக்கு எதிராக ஸ்ரீராம்! லோக்சபாவில் பரபரப்பு

    எம்பிக்கள்

    எம்பிக்கள்

    பதிலுக்கு பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே என முழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல் மாநிலங்களின் வரிசையின் படி தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.

    பாரத் மாதா கி ஜே

    பாரத் மாதா கி ஜே

    அப்போது ஹைதராபாத் எம்பியும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஒவைஸியின் பெயரை கூறி அழைத்தனர். பதவியேற்க வந்த போது பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.

    அமர்ந்தார்

    அமர்ந்தார்

    அதையும் மீறி அவர் பதவியேற்றுவிட்டு தனக்கே உரிய கோஷமான ஜெய் பீம், ஜெய் மீம், தக்பீர் அல்லாஹ் ஹு அக்பர், ஜெய்ஹிந்த் ("Jai bheem,Jai Meem, Takbeer Allah hu Akbar, Jai Hind" ) என கோஷமிட்டுவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

    குழந்தைகள் இறப்பு

    இதுகுறித்து ஒவைஸி செய்தியாளர்களிடம் என்னை பார்த்தவுடன் இதுகுறித்து அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அதே போல் அவர்கள் அரசியலமைப்பையும், பீகாரில் குழந்தைகள் இறப்பையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

    English summary
    BJP MPs chant JaiShri Ram in Loksabha while AIMIM chief ends with Jai Hind and Allah hu Akbar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X