டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தல்.. உலகின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்தார் முகேஷ் அம்பானி.. ஆசியாவின் ஒரே நபர்!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் இருக்கும் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்டில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அதிரடியாக இணைந்து சாதனை படைத்து உள்ளார்.

உலகம் முழுக்க பொருளாதார ரீதியாக பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. யாரும் நினைத்து பார்க்க முடியாத சரிவை உலகமே பொருளாதார ரீதியாக அனுபவித்து வருகிறது. ஆனால் இந்த நிலையிலும் கூட உலகில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவின் அலிபாபா தொடங்கி இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி வரை எல்லோரின் சொத்து மதிப்பும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் முகேஷ் அம்பானி புதிய சாதனை ஒன்றை படைத்து உள்ளார்.

அவசரமாக வேண்டும்.. ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன? அவசரமாக வேண்டும்.. ஏவுகணையை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்கும் இந்தியா.. பின்னணி என்ன?

டாப் லிஸ்ட்

டாப் லிஸ்ட்

அதன்படி உலகில் இருக்கும் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்டில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி அதிரடியாக இணைந்து சாதனை படைத்து உள்ளார். முகேஷின் மொத்த சொத்து மதிப்பு 64.5 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட இது 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த பட்டியலில் இவர் தற்போது 9வது இடத்தில் இருக்கிறார்.

பட்டியலில் இணைந்தார்

பட்டியலில் இணைந்தார்

Bloomberg Billionaires Index வெளியிட்ட பட்டியலில் உலகிலேயே முகேஷ் அம்பானிதான் 9வது பெரிய பணக்காரர். இவர் 9 மற்றும் 10வது இடத்தில் இருந்து லாரி எல்லிசன் மற்றும் பிரான்ஸ்சாய்ஸ் பெட்டர்ன்கார்ட் மேயர்ஸ் ஆகியோரை முந்தி இருக்கிறார். ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் 42 பங்குகள் இவரிடம் இருக்கிறது. இதன் மூலம் இவர் 9வது இடத்திற்கு வந்துள்ளார்.

கடன் இல்லை

கடன் இல்லை

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்தான் கடனே இல்லாத நிறுவனமாக தன்னை அறிவித்தது. நான் சொன்னபடி செய்துவிட்டேன் என்று ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூட ஸ்டைலாக தெரிவித்து இருந்தார். பொருளாதார மந்த நிலைக்கு இடையிலும் கூட ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் இந்த சாதனையை செய்துள்ளது.

என்ன வயது

என்ன வயது

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு தற்போது 63 வயதாகிறது. ஆசியாவில் இருந்து இந்த பட்டியலில் சேரும் ஒரே கோடீஸ்வரர் என்ற பெருமையை முகேஷ் பெற்றுள்ளார். மும்பையில் இருக்கும் இவரின் வீடு 27 மாடி கொண்டது ஆகவும். இதில் 168 கார்கள் நிறுத்த முடியும், ஹெலிபேட் அமைந்துள்ளது. மற்றும் பல வசதிகள் இடம்பெற்றுள்ளது.

என்ன முடிவு

என்ன முடிவு

கடந்த சில நாட்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் பல வரிசையாக ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளது. இதன் மூலம் இந்தியாவிலும், உலக அளவிலும் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது . அமெரிக்காவின் சில்வர் லேக் நிறுவனம் ஜியோவின் பங்குகளை 5655 கோடிக்கு வாங்கியது. ஜியோவின் 1.5% பங்குகளை அந்த நிறுவனம் வாங்கியது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான விஸ்டா ஈக்யூட்டி பார்ட்னர் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.

Recommended Video

    Meet Manoj Modi the Brain behind Mukesh Ambani
    தொடரும் முதலீடு

    தொடரும் முதலீடு

    இதன் மூலம் ஜியோவின் பங்குகளை 11637 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நான்கு நிறுவனங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 67,194.75 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் டெலிகாம் கீழ் வரும் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளைப் பேஸ்புக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு உள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோவில் செய்யப்பட்ட மிக முக்கியமான முதலீடு ஆகும். இந்தியாவில் ஆன்லைன் மார்கெட்டிங்கில் களமிறங்க வேண்டும் என்று பேஸ்புக் பல வருடமாக திட்டமிட்டு வந்தது.

    English summary
    Reliance Industries chief Mukesh Ambani joins the list of elite: Becomes Top 9th wealthiest person in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X