டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாப் 6.. அசந்து போன அமெரிக்க கோடீஸ்வரர்கள்.. பில்லியனர் லிஸ்டில் எலான் மஸ்கை முந்திய முகேஷ் அம்பானி!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் டாப் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் தற்போது எலோன் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முகேஷ் அம்பானி முந்தி இருக்கிறார். இந்த லிஸ்டில் முகேஷ் அம்பானி 6வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு இது மிகவும் பொன்னான காலம் என்றுதான் கூற வேண்டும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது.

கடந்த மே மாத தொடக்கத்தில்தான் மொத்தமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்ததுதான் இதற்கு காரணம் ஆகும்.

டாப் 10

டாப் 10

இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானி உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 65 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் டாப் 10 இடத்திற்கு வந்தார். இந்த நிலையில் அதோடு நிற்காமல் தொடர்ந்து அவரின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் கடந்த வாரம் அவர் உலகின் இன்னொரு கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட்டை முந்தினார்.

இப்போது என்ன

இப்போது என்ன

இந்த நிலையில் உலகின் டாப் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் தற்போது எலோன் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முகேஷ் அம்பானி முந்தி இருக்கிறார். இந்த லிஸ்டில் முகேஷ் அம்பானி 6வது இடத்தை பிடித்து இருக்கிறார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பில் 2.17 பில்லியன் டாலர் உயர்ந்த நிலையில் அவர் 6ம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் உலகின் டாப் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் தற்போது எலோன் மஸ்க் மற்றும் கூகுள் நிறுவனர் லாரி பேஜை இந்தியாவின் முகேஷ் அம்பானி முந்தி இருக்கிறார். இந்த லிஸ்டில் முகேஷ் அம்பானி 6வது இடத்தை பிடித்து இருக்கிறார். முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு 72.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அவரின் சொத்து மதிப்பில் 2.17 பில்லியன் டாலர் உயர்ந்த நிலையில் அவர் 6ம் இடத்தை பிடித்துள்ளார்.

டாப் 5

டாப் 5

விரைவில் அவர் டாப் 5 இடத்தை பிடிப்பார் என்று கூறுகிறார்கள். தற்போது உலகின் டாப் பணக்காரராக முதல் இடத்தில் ஜெப் பெசொஸ், இரண்டாம் இடத்தில் பில் கேட்ஸ் , மூன்றாம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட், நான்காம் இடத்தில் மார்க் ஜுக்கர்பெர்க், ஐந்தாம் இடத்தில் ஸ்டீவ் பால்மர் உள்ளனர். 6ம் இடத்தில் முகேஷ் அம்பானி இருக்கிறார்.

மற்றவர்கள் மதிப்பு

மற்றவர்கள் மதிப்பு

முகேஷ் அம்பானி கடந்த 22 நாட்களில் மட்டும் 7.9 பில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். தினசரி கணக்கில் இவர் 2700 கோடி ரூபாய் கடந்த 22 நாட்களாக தினமும் சம்பாதித்து இருக்கிறார். முகேஷ் அம்பானிக்கு அடுத்து கூகுள் நிறுவனர் லாரி பேஜ், அதன்பின் வாரன் பப்பஃபெட் இருக்கிறார்கள். 10வது இடத்தில் எலோன் மஸ்க் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ காரணம்

ஜியோ காரணம்

கடந்த இரண்டு மாதமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து பல்வேறு உலக நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறது. அதிலும் அமெரிக்காவில் பல கோடிகளை ஈட்டி வரும் நிறுவனங்கள் ஜியோ மீது முதலீடுகளை குவிக்க தொடங்கி உள்ளது. யோவின் 25.24% பங்குகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 118,318.45 முதலீடுகளை ஈட்டி உள்ளது.

English summary
Mukesh Ambani on the floor: Becomes the top 6 billionaire in the world over takes Elon Musk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X