டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி ரொம்ப கஷ்டம்.. கமல் சொன்ன போது எல்லோரும் எதிர்த்தனர்.. அம்பானி என்றதும் சைலன்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    What is JioFiber? | ஒரு கேபிள்.. உங்கள் வாழ்க்கையையே மாற்றும்..

    டெல்லி: நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்த திட்டம் ஒன்றை தற்போது ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பெரிய அளவில் செயல்படுத்த இருக்கிறார்.

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி ஜியோஃபைபர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்குகிறது.

    ஜியோஃபைபர் மூலம் வீடுகளுக்கு டீவியும், ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸும் வழங்கப்படும். ஜியோஃபைபர் இணைப்பை பெறுபவர்களின் வீடுகளுக்கு ஜியோஃபைபர் கேபிள் இணைப்பு கொடுக்கப்படும்.

    என்ன பயன்

    என்ன பயன்

    இந்த ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் உங்கள் கேபிளுக்கு மாற்றாக செயல்படும். அதேபோல் நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களுடன் இவர்கள் செய்ய உள்ள ஒப்பந்தம் காரணமாக அவர்களின் ஷோக்களை காசு கொடுக்காமல் நீங்கள் ஜியோஃபைபர் செட் ஆப் பாக்சில் பார்க்க முடியும்.

    இன்னொரு அம்சம்

    இன்னொரு அம்சம்

    ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் உங்கள் லோக்கல் கேபிள் சேனல்களை பார்க்க முடியும். அதேபோல் இதில் இன்னொரு முக்கியமான அம்சம் புதிய படங்கள் தியேட்டரில் வந்த அதே நாளில் நீங்கள் அதை ஜியோஃபைபர் செட் ஆப் பாக்ஸ் மூலம் டீவியில் அந்த படத்தை பார்க்க முடியும். ஆனால் இதற்கு 2020 மே வரை காத்திருக்க வேண்டும். காசு தர வேண்டியது இல்லை. மாத சந்தாவில் இது அடங்கும்.

    எப்படி இயங்கும்

    எப்படி இயங்கும்

    அதாவது ஜியோஃபைபர் கேபிள் மூலம் படம் உங்கள் வீட்டு டீவிக்கே வரும். அதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆன அதே தேதியில் உங்கள் வீட்டிற்கு வரும். இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் தியேட்டர் என்பது பெரிய அளவில் குறையும். தியேட்டர் வருமானமும் மொத்தமாக அடிவாங்கும். பெரிய மாற்றம் ஒரு வருடத்தில் நிகழும்.

    இதேதான்

    இதேதான்

    இதே திட்டத்தைத்தான் கமல்ஹாசன் தசாவதாரம் முதல் பார்ட் வெளியான போதும் குறிப்பிட்டார். டிடிஹெச் மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட 2013ல் அவர் திட்டமிட்டார். ஆனால் அவருக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்களின் சங்கம் களமிறங்கி போராட்டம் செய்தது. இதனால் அந்த திட்டத்தை கமல்ஹாசன் அப்போது கைவிட்டார்.

    முடியாது

    முடியாது

    இப்போதே அதே திட்டத்தை முகேஷ் அம்பானி பெரிய அளவில் நாடு முழுக்க செயல்படுத்த, கையில் எடுத்து இருக்கிறார். இதற்கு அவர் ஒருவருடம் மட்டுமே கால அவகாசம் கொடுத்துள்ளார். அடுத்த வருடம் மே மாதம் இது செயலுக்கு வரும். இந்தியாவிலேயே அவரின் நிறுவனம் மிகப்பெரியது மற்றும் அரசியல் சக்தி வாய்ந்தது என்பதால் இதற்கு எதிராக யாருமே இது வரை குரல் கொடுக்கவில்லை.

    English summary
    Mukesh Ambani used Kamal Haasan's plan in JioFiber for new movie broadcast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X