டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் பொறுப்பு... முக்தார் அப்பாஸ் நக்வி மத்திய அமைச்சரானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministers list | பிரதமரானார் மோடி! அமைச்சர்களாகிய அமித்ஷா-ஜெய்சங்கர்

    டெல்லி: மோடியின் அமைச்சரவையில் முக்தார் அப்பாஸ் நக்விக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது.

    Mukhtar Abbas Naqvi becomes Union Minister In Modi Government

    மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் பட்டியலில், ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பியூஸ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவ்டேகர் உள்ளிட்டோருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ரவி்சங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, அர்ஜூன் மேக்வால், ராம்தாஸ் அத்வாலே, ஹர்சிம்ரத் கவு, தவார் சந்த் கெலாட், அர்விந்த் சவந்த், ஜிதேந்திர சிங், பபுல் சுப்ரியோ, சதானந்த கவுடா, கிரெண் ரெஜிஜூ, ராஜ்யவர்தன் சிங் ரதோர், கிஷான் ரெட்டி, பிரலஹாத் படேல், சுரேஷ் அங்காடி, கைலாஷ் சவுத்ரி, கிஷன்பால் குஜ்ஜார்,

    புருசோத்தம் ருபாலா, மன்சுக் மாண்டேவியா, பிரல்ஹாத் ஜோஷி, தேபாஸ்ரீ சவுத்ரி, கஜேந்திர ஷெகாவத், ரத்தன் லால் கட்டாரியா, ரமேஷ் போக்ரியால், அர்ஜூன் முண்டா, ராமேஸ்வர் தேலி, ஸ்ரீபத் நாயக், ரேணுகா சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில், முக்தார் அப்பாஸ் நக்வி மீண்டும் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் அவர்,

    1978 - யுவ ஜனதா கட்சியின் அலகாபாத் மாவட்ட துணைத் தலைவர் மற்றும் இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்தார்.

    1979 - யுவ ஜனதா கட்சியின் உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளர்.

    1982 - உத்தரபிரதேச பொதுச் செயலாளராக பதவி உயர்வு.

    1992 - பா.ஜ.க. இளைஞர் பிரிவின் தேசிய துணைத் தலைவர், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா.

    1998-99 - மக்களவை உறுப்பினர். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பதவியுடன், பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

    2001-2003, கலாச்சாரம் மற்றும் பயிற்சி மையத்தின் (சி.சி.ஆர்.டி) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2000 - பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்.

    2002 - இல் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    2003 -2008 உறுப்பினர், ஹாஜ் கமிட்டி

    2013 டிசம்பர் - ராஜ்ய சபைக்கான ஹிந்தி சலாஹகார் சமிதி உறுப்பினர்

    நவம்பர் 2014 - பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்

    2016 - 4 ஜூலை வரை, உத்திர பிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஜூலை 8, 2016 முதல் ஜார்க்கண்டில் ராஜ்யசபா எம்.பி.

    மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்விக்கு, மோடி தலைமையிலான அரசாங்கத்தில் மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    English summary
    Modi Government: Mukhtar Abbas Naqvi becomes Union Minister
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X