• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மோடி தான் அடுத்த பிரதமர்.. வாழ்த்திய முலாயம்.. மகன் உதறுகிறார்.. அப்பா உளறுகிறாரோ??

|

டெல்லி:மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று முலாயம் சிங் கூறிய கருத்தை ஏற்கவில்லை என்றும் மூத்த அரசியல் தலைவரான அவர் மீது தாம் மிகுந்த மதிப்பை வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள பாஜக தலைமையிலான ஆட்சியின் கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளாகும். ஆகையால் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர்.

பேசிய தலைவர்களில் யாருடைய பேச்சு முக்கியமாக பார்க்கப்பட்டதோ... இல்லையோ 2 பேரின் உரையானது... அனைத்து தரப்பினரையும் உற்று பார்க்க வைத்துவிட்டது. ஒன்று துணை சபாநாயகரும், அதிமுக, பாஜக கூட்டணிக்கு முடடுக்கட்டை போட்டுவருபவருமான தம்பிதுரையின் உரை. அடுத்தது மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ்வின் பேச்சு.

மோடி தான் பிரதமர்

மோடி தான் பிரதமர்

அவர் பேசியவைகளில் முக்கியமானது இதுதான்: மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான்.2019ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும்.

அரவணைக்கும் மோடி

அரவணைக்கும் மோடி

அனைத்து கட்சிகளையும் மோடி அரவணைத்து செல்கிறார். தற்சமயம் அவையில் உள்ள அனைத்து எம்பிக்களும் மீண்டும் வெற்றி பெற்று எம்பிக்களாக வர வேண்டும் என்று கூறினார்.

அரசியல் பேச்சுகள்

அரசியல் பேச்சுகள்

அவரது இந்த பேச்சுதான் தற்போது புதிய அரசியல் விவாதங்களை முன் எடுத்து வைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மகன் அகிலேஷ் யாதவை அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு தடுத்து... அதன் பேரில் கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேல் வழக்கும் பதிவானது. தம்மை நுழையவிடாமல் தடுத்ததாக அகிலேஷ் யாதவ் புகார் கூறினார். அதே நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இறுதிநாளில் அவர் மோடியை பாராட்டி.. நீங்கள் தான் பிரதமராக வரவேண்டும் என்று கூறியது புதிய விவாதங்களுக்கு இட்டு சென்று உள்ளது.

மிகுந்த மரியாதை

மிகுந்த மரியாதை

இந்நிலையில் முலாயமின் இந்த பாராட்டு பத்திரம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், முலாயம் சிங் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் மிக மூத்த தலைவர்.ஆனால் அவரது இந்த கருத்தை... பார்வையை என்னால் ஏற்க முடியாது என்று பக்குவப்பட்ட தலைவராக பதிலளித்துள்ளார்.

ஒற்றுமையில் இடைவெளி

ஒற்றுமையில் இடைவெளி

அவரது இந்த பதில்... முலாயம் பற்றிய கருத்தை ராகுல் முடித்து கொண்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அரசியல் கணக்கீடுகள் உள் அர்த்தம் கொண்டவையாக பார்க்கப்படுகின்றன. தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப் பட வில்லை. மத்திய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டு வரும் எதிர்க் கட்சிகளிடையே ஓர் இடைவெளி இருப்பது போன்ற நிகழ்வுகள் காணப்படுகின்றன.

பாராட்டு அரசியல்

பாராட்டு அரசியல்

இந்த சூழ்நிலையில் அப்பா, மகன் இருவருமே பாஜக அரசை பகைத்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருக்கலாம் என்றும்,யாரேனும் ஒருவர் மோடியுடனான பாராட்டுகள் வழியாக எதிர்வரும் அரசியலை தமக்கானதாக மாற்ற முடியும் என்ற அதீத ஆசையாக இருக்கலாம்.

பாடம் கொடுக்கவே பாராட்டு

பாடம் கொடுக்கவே பாராட்டு

முலாயமின் கருத்துக்கு ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிபிஐ அமைப்பை மோடி அனுப்பி விடுவாரோ என்று பயந்து தான் அப்படி பேசியிருக்கிறார் என்று அந்த கட்சி கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது, ஆனால்... நாடாளுமன்றத்தின் வெளியே பேசிய முலாயம்... மோடி மீண்டும் பிரதராக வேண்டும்... அப்போது தான் அவருக்கு பாடம் கற்று கொடுக்க முடியும் .. அந்த அடிப்படையில் தான் அவ்வாறு பேசியதாக மழுப்பலான பதிலை தந்திருக்கிறார்.

பழமொழி

பழமொழி

அதுமட்டுமல்லாது... இளைய தலைமுறையின் அரசியலாக தமது மகனிடம் அனைத்தையும் ஒப்படைத்தாகி விட்டது. மீண்டும் தமக்கு எம்பி பதவி கிடைக்குமோ இல்லையோ என்று... அதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் உலா வருகின்றன.

English summary
I have huge respect on Mulyam singh yadav says Congress president Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X