டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு எப்போது?.. முரளிதர ராவ் பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக மாநில பாஜக தலைவர் தேர்வு எப்போது.. முரளிதர ராவ் விளக்கம்

    டெல்லி: தமிழகத்தில் பாஜகவின் உள்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அதன் பின்னர்தான் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்தார்.

    ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் எந்த வித சந்தேகங்களுக்கு இடமில்லை என நேற்று முன் தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி பாஜகவினர் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கும் அக்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது.

    நான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சுநான் முதல்வர் வேட்பாளர் என எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை.. ஆனால்.. திருமாவளவன் பேச்சு

    முரளிதர ராவ் பங்கேற்பு

    முரளிதர ராவ் பங்கேற்பு

    தமிழகத்தில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் ரபேல் விவகாரம் தொடர்பாக தவறான பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ரபேல் விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாட்டு மக்களிடம் பிரச்சாரம் மூலம் எடுத்துச் சொல்வோம்.

    உள்ளாட்சித் தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தல்

    தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் 15 ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். அதன் பின்பு மாநில தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். உள்ளாட்சி தேர்தலுக்காக திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம்.

    கருத்து கூற முடியாது

    கருத்து கூற முடியாது

    எத்தனை இடங்களில் போட்டி என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. சபரிமலையில் தரிசனம் செய்ய பெண் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து கருத்து கூற முடியாது.

    திருவள்ளுவர் சிலை

    திருவள்ளுவர் சிலை

    சபரிமலை பெண் பக்தர்கள் அனுமதி குறித்த விவகாரத்தில் பக்தர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். விபூதி பூசாத திருவள்ளுவர் சிலையை எங்கும் காண முடியுமா? திமுக வேண்டுமெனில் அவர்கள் கட்சி அலுவலகத்தில் விபூதி பூசாத திருவள்ளுவர் சிலையை வைத்துக் கொள்ளலாம். இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.நாங்கள் விபூதி பூசிய திருவள்ளுவரை தான் வைத்து கொள்வோம் என்றார்.

    English summary
    BJP National Secretary Muralidhara Rao says that after inner party elections are over, then Tamilnadu State President will be selected.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X