டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு தடபுடல் விருந்து.. வந்திறங்கியது காஸ்ட்லி காளான்கள்.. விலை தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் டொனால்ட் டிரம்புக்கு விருந்து அளிக்கவுள்ள நிலையில் இமயமலையில் மட்டுமே கிடைக்கக் கூடிய விலையுயர்ந்த காளான்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    Why Melania Trump visit India? Here is the reasons

    டிரம்பின் 2ஆவது நாள் இந்திய பயணத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை அவர் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருக்கும் காந்தியின் நினைவிடத்தை பார்வையிட்டு அஞ்சலி செலுத்துகிறார்.

    கொத்தமல்லி

    கொத்தமல்லி

    இதையடுத்து டிரம்ப் உள்ளிட்டோருக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது. இந்த விருந்து பிரெஞ்ச் நாட்டு உணவு வகையில் முதலில் பரிமாறப்படுகிறது. அதில் உருளை கிழங்கு டிக்கி, கீரை பப்டி உள்ளிட்டவை அடங்கும். மேலும் வட இந்திய கடல் உணவான சால்மன் மீன் டிக்கா, லெமன் கொத்தமல்லி சூப் வழங்கப்படுகிறது.

    ரூ 10 ஆயிரம்

    ரூ 10 ஆயிரம்

    மஸ்ரூம் பிரியாணி முக்கிய உணவாக வழங்கப்படுகிறது. காட்டு மஸ்ரூம்களை கொண்டு இந்த உணவு தயார் செய்யப்படவுள்ளது. இதற்காக இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காளான்கள் கிலோ ரூ 10 ஆயிரம் முதல் ரூ 30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்க்கப்படுகிறது.

    ஐஸ்கிரீம்

    ஐஸ்கிரீம்

    அதோடு மட்டன் பிரியாணி, ஆட்டின் கால்களை கொண்டு செய்யப்படும் ஒரு வகை உணவும் தயார் செய்யப்படுகிறது. அது போல் குடியரசுத் தலைவர் மாளிகையின் பிரதான உணவான தால் ரைசினா மற்றும் புதினா ரைத்தா பரிமாறப்படும். அத்தோடு ஹேசல்நட் ஆப்பிள், வெண்ணிலா ஐஸ்கிரீம், மால்புவா ராப்டி ஆகியவையும் விருந்தில் அடங்கும்.

    உணவில்

    உணவில்

    இந்த விருந்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் உணவு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். மாட்டிறைச்சி, பர்கர், மீட் லோப், டயட் கோக் ஆகியவையும் காய்கறிகள் சாலட் ஆகியவையும் உணவில் சேர்த்து கொள்வார் என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

    English summary
    Costly Mushrooms and Dal Raisina in President's Banquet. Around 100 guests will attend this banquet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X