பாஜக-ஜேடியூ கூட்டணியை மொத்தமாக கைவிட்ட யாதவர்கள்- முஸ்லீம்கள்.. சாணக்யா எக்ஸிட் போல்
டெல்லி: பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் உள்ளிட்டவை அடங்கிய எதிர்க்கட்சி கூட்டணி, யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாக்குகளை அதிகளவில் பெற்றுள்ளதாக டுடேஸ் சாணக்கியா எக்ஸிட் போல் சர்வே தெரிவிக்கிறது.
பீகாரில் மூன்று கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்ட நிலையில், டுடேஸ் சாணக்கியா தனது கருத்துக் கணிப்பில், 191 சீட்டுகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு செல்லப்போவதாக அதிரடியாக தெரிவித்துள்ளது.

மற்ற எக்ஸிட் போல் முடிவுகளை விட இதில் மிகப் பெரும்பான்மையான வாக்குகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பக்கம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜாதி ரீதியாக எடுத்துக்கொண்டு பார்த்தால், பட்டியல் இனத்தில் உள்ள வாக்காளர்களில் 34% பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணிக்கு ஓட்டு போட்டு உள்ளதாகவும், 39 சதவீதம் பேர் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பீகார்: மோடிக்காக ஓட்டு போட்டது 3% பேர்.. வேலை வாய்ப்புக்காக 30% ஓட்டு- இந்தியா டுடே எக்சிட் போல்
யாதவ் ஜாதியினரை தவிர பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் 56% பேர் பாஜக கூட்டணிக்கும், 30 சதவீதம் பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாதவர் வாக்குகளில் 69 விழுக்காடு ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கு சென்றுள்ளது. பாஜக கூட்டணிக்கு 22 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பீகாரில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 16% பேர் யாதவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
உயர்ஜாதி பிரிவில் இருக்கக்கூடியவர்களில் 60 சதவீதம் பேர், பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லீம்களில் 80% பேர் ராஷ்ட்ரிய ஜனதா தளம்- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். பீகார் மக்கள் தொகையில் 17% பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக பாஜகவுக்கு செல்லும் முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள் பிளவுபட்டு ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றுள்ளன என்பதை இந்த கருத்துக் கணிப்பு எடுத்துக் காட்டுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் யாதவர்களின் வாக்குளில் 20 சதவீதத்துக்கும் அதிகமாக பாஜக இழந்துள்ளது என்பதையும் இந்த சர்வே தெரிவிக்கிறது.