டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாவடக்கம் வேண்டும்.. பேச்சில் நாகரீகத்தை கடைபிடியுங்கள்.. பாஜக தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் கண்டிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டித்துள்ளது. பேசும் மொழியிலும் நாகரீகத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுகள் டெல்லியில் நடந்த வன்முறை விவகாரத்திற்கு காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

Must maintain civility in language too: RSS advice bjp leaders

டெல்லி உயர் நீதிமன்றம் பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகீயோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெரும் சர்ச்சைக்கு பின் இவர்களின் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் அல்ல. இது அவர்களின் சொந்த கருத்துக்கள், இத்தகைய கருத்துக்ககளை பாஜக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் அயோத்தி எம்பி லல்லு சிங், அயோத்தி பார்வ் என்ற கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இணை பொது செயலாளர் தாட்டட்ரேயோ ஹோஷபலே கலந்து கொண்டு உரையாற்றினார். இரண்டாவது நாள் கூட்டத்தில் நேற்று அவர் உரையாற்றுகையில் சர்ச்சை பேச்சுக்காக பாஜக தலைவர்களை கண்டித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகம் முழுவதும் ராமருக்கு வணங்குகிறது, ஆனால் அவரது சொந்த நாட்டில் உள்ள பக்தர்கள் கோயிலின் கட்டுமானத்தைத் தொடங்க அரசாங்க உத்தரவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல்பிரதமர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர்.. குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை.. ஆர்டிஐ தகவல்

சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையில் நாம் அடக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இது ராமர் நமக்கும் அளிக்கும் செய்தியும் கூட. ராம் பகவான் "மரியாதை புருஷோத்தம்" என்று நினைவுகூரப்படுகிறார், ஏனெனில் அவர் பயன்படுத்திய மொழியில் கூட அடக்கத்தைக் கடைப்பிடித்தார். இன்றைய சூழலில் ராமர் நமக்கும் அளித்த செய்தி என்னவென்றால், ஒருவர் மனதில் தோற்றுவதை எல்லாம் பேசக்கூடாது ... மாறாக அவர் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

English summary
RSS advice bjp leaders over delhi protest: Must maintain civility in language too
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X