டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகேஸ்வர ராவ் வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டின் ஒரே தீர்ப்பு.. இத்தனை பெரிய பின் விளைவுகளா!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

முசாபர் நகர் குழந்தைகள் காப்பக பாலியல் வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் பணியிட மாற்றம் செய்தார். இதனால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாகேஸ்வர ராவ் தண்டிக்கப்பட்டுள்ளார்.

நாகேஸ்வர ராவ் செய்தது தவறுதான் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் பல முக்கிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.

என்ன அவமதிப்பு

என்ன அவமதிப்பு

நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் அலுவலகத்திற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

அதேபோல் இவர் பணியிட மாற்றம் செய்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை மீண்டும் பீகார் வழக்கை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உடனே இதற்கான பணியாணையை பெற்று, சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை உடனே பணியை தொடங்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது..

இனி முடியாது

இனி முடியாது

இந்த நடவடிக்கை காரணமாக நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி, பதவி உயர்வுகளும் பெற முடியாது. நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர் என்பதால் மத்திய அரசு இவருக்கு இனி பணி உயர்வு வழங்க முடியாது. பணிக்காலம் முடியும் வரை இவர் இதே ரேங்கில் பணியாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

மிக மோசம்

மிக மோசம்

இது இரண்டு விதங்களில் பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஏகே சர்மா முசாபர்நகர் காப்பக வழக்கில் பாஜகவினர் மீது வழக்கு தொடரும் முடிவில் இருக்கிறார். அவர் மீண்டும் வழக்கை எடுத்து இருப்பது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாகும். அதேபோல் பிரதமர் மோடிக்கு நெருக்கமான நாகேஸ்வர ராவ் இனி பணி உயர்வு பெற முடியாததும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

English summary
Muzaffarpur shelter home case: CBI's Nageswara Rao can't get any more promotions hereafter as he is guilty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X