டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அமெரிக்கா பிளைட் ஏற என் தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவு செய்தார்.. கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: என் அப்பா ஒரு வருடம் சம்பாதிக்கும் தொகைக்கு நிகரான பணத்தை சேர்த்து வைத்து நான் அமெரிக்காவிற்கு விமானத்தில் செல்ல டிக்கெட் எடுத்துக் கொடுத்தார் என்று கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

உலகப் பொருளாதாரத்தின் பரந்த சரிவை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 2020ம் ஆண்டில் கல்வி தொடர்பான எங்கள் தலைமுறை அணுகுமுறையால் நீங்கள் விரக்தியடையக்கூடும். பொறுமையுடன் இருங்கள். இது உலகிற்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும் என்றார்.

"Dear Class of 2020" என்ற பெயரில் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா, பாடகியும் நடிகையுமான லேடி காகா, பாடகர் பியோனஸ் மற்றும் தென் கொரிய இசைக்குழு பி.டி.எஸ் உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாங்கள் இருக்கிறோம்.. கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை நாங்கள் இருக்கிறோம்.. கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை

தனக்கு ஏற்பட்ட சவால்கள்

தனக்கு ஏற்பட்ட சவால்கள்

கொடிய தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக ஆன்லைனில் நடந்த இந்த விழாவில் சுந்தர் பிச்சை பேசும் போது, தனது இளமைக்கால வாழ்க்கையை நினைவு கூர்ந்தார், சிரமங்களை எதிர்கொண்டு நேர்மறையாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அமெரிக்காவுக்கு இந்தியாவை விட்டு வெளியேறி வந்த போது அவர் சந்தித்த சவால்களை விவரித்தார்.

என் தந்தையின் ஒரு வருட சம்பளம்

என் தந்தையின் ஒரு வருட சம்பளம்

இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறுகையில், ' 27 வருடங்களுக்கு முன்பு நான் படிப்பதற்காக அமெரிக்கா வந்தேன். எனது தந்தை அமெரிக்காவிற்கு நான் விமானத்தில் செல்வதற்காக விமான டிக்கெட் எடுக்க ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார், அதனால் நான் ஸ்டான்போர்டில் படிக்க முடிந்தது. அப்போதுதான் நான் ஒரு விமானத்தில் முதல் முறையாக சென்றேன். அமெரிக்கா மிக காஸ்ட்லியானது. வீட்டிற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டாலருக்கும் அதிகமாக இருந்தது , அதாவது இந்தியாவில் எனது அப்பாவின் மாத சம்பளத்திற்கு சமமான தொகை அப்போது தொலைப்பேசியில் பேச செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்.

டிவி கணிணி இல்லை

டிவி கணிணி இல்லை

இப்போதெல்லாம் குழந்தைகள் பல்வேறு வடிவம் மற்றும் அளவுகள் கொண்ட அனைத்து வகையான கம்ப்யூட்டர்களுடன் வளர்ந்து வருகிறார்கள். நான் அந்த காலத்தில் தொழில்நுட்பத்திற்கான அதிக அணுகல் இல்லாமல் வளர்ந்தேன். எனக்கு பத்து வயது வரை நாங்கள் தொலைபேசியை பார்த்து இல்லை. நான் பட்டதாரியாவதற்காக அமெரிக்கா வரும் வரை கம்ப்யூட்டரையும் டிவியையும் எளிதில் அணுக முடியாது. நான் வளர்ந்த போது தொலைக்காட்சியில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது.

 விரக்தியடையக்கூடும்.

விரக்தியடையக்கூடும்.

இளைஞர்களே உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், இ அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் என்னுடைய தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும். காலநிலை மாற்றம், அல்லது கல்வி தொடர்பான என்னுடைய தலைமுறையின் அணுகுமுறையால் நீங்கள் விரக்தியடையக்கூடும். பொறுமையுடன் இருங்கள். இது உலகிற்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும்" இவ்வாறு கூறினார்.

Recommended Video

    Remove China Apps-ஐ Play Store-லிருந்து நீக்கிய Google
    கூகுள் சிஇஒவாக இருக்கிறார்

    கூகுள் சிஇஒவாக இருக்கிறார்

    இளைஞர்களே உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், இது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் என்னுடைய தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும். காலநிலை மாற்றம், அல்லது கல்வி தொடர்பான என்னுடைய தலைமுறையின் அணுகுமுறையால் நீங்கள் விரக்தியடையக்கூடும். பொறுமையுடன் இருங்கள். இது உலகிற்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும்' இவ்வாறு கூறினார்.

    English summary
    "My father spent the equivalent of a year's salary on my plane ticket to the US so I could attend Stanford. Google CEO Sundar Pichai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X