டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதோ.. இதுதான் "எட்டி"யின் காலடி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்

எட்டியின் கால்தடத்தை வெளியிட்டுள்ளனர் இந்திய ராணுவத்தினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yeti Footprints: இந்திய ராணுவம் வெளியிட்ட பனி மனிதனின் காலடித்தடம்- வீடியோ

    டெல்லி: உங்களுக்கு எட்டி தெரியுமா எட்டி.. அதுதாங்க பிரமாண்ட பனி மனிதன். அவனது பெயர்தான் எட்டி. அந்த எட்டியின் நடமாட்டம் குறித்து ஏகப்பட்ட செவிவழிச் செய்திகள் உலவி வருகின்றன இமயமலை பிராந்திய கிராமங்களில். இப்போது எட்டியின் காலடி இதுதான் என்று கூறி இந்திய ராணுவம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

    இதுவரை யாரும் எட்டியைப் பார்த்ததில்லை. ஏன் அதன் தடத்தைக் கூட பார்த்ததில்லை. ஆனால் எட்டி என்ற பனி மனிதன் இருப்பது உண்மை என்ற கருத்து மட்டும் இமயமலைப் பகுதி மக்களிடம் வலுவாக உள்ளது. இதனால் எட்டியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆய்வுகளும் கூட தொடர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில்தான் இதுதான் எட்டியின் காலடி என்று கூறி ஒரு புகைப்படத்தை இந்திய ராணுவம் வெளியிட்டது. இதுவரை எட்டி குறித்த எந்த அடையாளமும் நமக்குக் கிடைக்காத நிலையில் அதன் காலடி கிடைத்திருப்பதாக ராணுவம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் 40 டிகிரி வெயில்.. இது சும்மா டிரெய்லர்தான்.. இனிமேல்தான் மெயின் பிக்ஷர்- வெதர்மேன் சென்னையில் 40 டிகிரி வெயில்.. இது சும்மா டிரெய்லர்தான்.. இனிமேல்தான் மெயின் பிக்ஷர்- வெதர்மேன்

    ராணுவம்

    ராணுவம்

    நேபாளத்தின் மகாலு அடிவார முகாமிலிருந்து சற்று தொலைவில் இந்த காலடித் தடத்தை இந்திய ராணுவத்தின் மலையேற்றக் குழுவினர் பார்த்தனராம். அதன் புகைப்படம்தான் தற்போது வெளியாகியுள்ளது. அதில் காணப்படும் காலடித் தடத்தின் அளவானது 32.15 இன்ச் என்ற அளவில் உள்ளது.

    காலடித்தடம்

    காலடித்தடம்

    உண்மையில் எட்டி என்பது நேபாள நாட்டு மக்களின் மிகப் பெரிய நம்பிக்கையாகும். அவர்கள் கிட்டத்தட்ட எட்டியை ஒரு கடவுள் போல கருதுகின்றனர். இந்த நிலையில் எட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது நேபாளத்திலும் கூட பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி இந்த காலடித் தடம் காணப்பட்டுள்ளது.

    பூங்கா

    ராணுவம் வெளியிட்டுள்ள டிவீட்டில் இந்த பனிமனிதன் இதற்கு முன்புஒருமுறை மகாலு - பாருன் தேசிய பூங்கா பகுதியில் சிலரால் பார்க்கப்பட்டுள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரிய சைஸ் குரங்கு

    பெரிய சைஸ் குரங்கு

    எட்டியின் உருவம் எப்படி இருக்கும் என்று சரியாக தெரியவில்லை. 1920களில் இந்த பனிமனிதன் குறித்த முதல் தகவல் வெளியானது. பெரிய சைஸ் குரங்கு உருவில் இந்த பனி மனிதன் இருந்ததாக அப்போது கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த பனிமனிதன் குறித்து எந்தத் தகவலும் இல்லை. எட்டி என்ற பெயரை வைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர்தான். திபெத்தின் லக்பா லா பகுதியில் பனிமனிதன் நடமாட்டம் குறித்து அவர்தான் முதலில் கூறியிருந்தார்.

    உண்மையா?

    உண்மையா?

    அதன் பிறகு எட்டியை வைத்து ஏகப்பட்ட கதைகள், ஏன் படங்கள் கூட வந்து விட்டன. கம்ப்யூட்டர் கேம்ஸுகளும் கூட உள்ளன. மறுபக்கம் அறிவியலாளர்கள் எட்டியைத் தேடும் பணியை முடுக்கி விட்டனர். எட்டி இருப்பது உண்மையா.. இருந்தால் எப்படி இருப்பான்.. எங்கு இருப்பான்.. "சந்திரமுகி" படத்தில் வடிவேலு கேட்பது போலத்தான் இன்று வரை நாம் கேட்டு வருகிறோம்.. உண்மைதான் இதுவரை தெரியவில்லை.

    English summary
    Mysterious Footprints of mythical beast 'Yeti' released by expedition team
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X