டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீதிமன்ற அறையில் ப.சிதம்பரத்துக்கு கம்பராமாயணம் புத்தகத்தை அளித்தார் மனைவி நளினி சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்ததை அடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான கணவருக்கு நீதிமன்ற அறையில் வைத்து கம்பராமாயணம் புத்தகத்தை வழங்கினார் மனைவி நளினி சிதம்பரம்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில 15 நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்.

Nalini Chidambaram gives Kambaramayana to her husband P.Chidambaram

இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முன்ஜாமீன் வழக்கின் தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது.

எனவே இன்னும் 3 நாட்களுக்கு ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டுக் காவலிலாவது வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வாதிட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியோ ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

எல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்!எல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்!

அதே வேளையில் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய ப.சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். அப்போது நீதிமன்ற அறையில் வைத்து கணவர் சிதம்பரத்துக்கு கம்பராமாயண புத்தகத்தை கொடுத்தார் நளினி சிதம்பரம்.

English summary
Nalini Chidambaram gives Kambaramayana to her husband and former minister P.Chidambaram in court room.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X