டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுடச்சுட டீ + மனைவி தந்த கம்ப ராமாயணம்.. சிறையில் கழியும் ப.சிதம்பரத்தின் பொழுதுகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    டெல்லி: மனைவி நளினி கொடுத்த புத்தகத்தை படித்து கொண்டும், தனக்கு பிடித்தமான டீயை குடித்து கொண்டும் சிறையில் நாட்களை கழித்து வருகிறாராம் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

    வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்து.. அதிகாரிகளால் கைது செய்யப்படும்போது யாருக்குமே தெரிந்திருக்காது, ப.சிதம்பரம் இவ்வளவு நாள் சிறையில் இருப்பார் என்று!

    எத்தனையோ இழுபறிகள், விசாரணைகள் நடந்தாலும் வருகிற 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ப.சிதம்பரம் இருக்க போவது உறுதி. கைதான மறுநாளே, வெளியில் பார்க்க சிரித்த முகம்போல இருந்தாலும், சிறைக்குள் என்னவோ வாடிதான் போயுள்ளார் போலும்!

    புத்தகம்

    புத்தகம்

    வெஸ்டர்ன் டாய்லட், கட்டில், பெட், இவைகளை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் ப.சிதம்பம். அப்போது படிப்பதற்காக புத்தகம் வைத்துக் கொள்ள அனுமதி வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சொன்னார்.

    நளினி

    நளினி

    அதன்படியே சில சலுகைகள் செய்து தர கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. முதல் வகுப்பு வசதி என்றாலும் சிறை உணவுதான் தரப்படுகிறது. அதனால்தான் சிதம்பரத்துக்கு தேவையான டிரஸ்களை கொண்டு போய் மனைவி நளினி தரும்போது, ஒரு சில வரலாறு சார்ந்த தமிழ், ஆங்கில புத்தகங்களையும் தந்தார்.

    கம்பராமாயணம்

    கம்பராமாயணம்

    அதில் முக்கியமானது கம்பராமாயணம். இவைகளைதான் சிதம்பரம் படித்து கொண்டிருக்கிறாராம். அடிக்கடி, தனக்கு பிடித்தமான டீயை கேட்டு வாங்கி குடிக்கிறாராம்! என்ன இருந்தாலும், இப்படி தாம் கைதானதற்கு சொந்த மாநிலத்தில் பெரிசா யாருமே ரியாக்ட் பண்ணலையே என்ற வருத்தமும் சிதம்பரத்துக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.

    சிறைவிதி

    சிறைவிதி

    அதேபோல, கைது நடவடிக்கையை கண்டித்து தேசிய அளவில் கட்சி சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எதிர்பார்த்தார் போலும்.. அதுவும் இல்லை என்பதால் ப.சி. கொஞ்சம் அப்செட்தானாம்! எப்படியோ.. சிறை விதிகளுக்கு உட்பட வசதிகளுக்கு நடுவே மனைவி நளினி தந்த புத்தகத்தை படித்து கொண்டு சிதம்பரத்தின் பொழுதுகள் கழிந்து வருகின்றதாக கூறப்படுகிறது!

    English summary
    Nalini Chidambaram has given kambaramayana and English Books to her husband P Chidambaram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X