டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதுசா வந்த டிவி சார்.. எங்கே போச்சுன்னே தெரியலை.. காணாமல் போன நமோ!

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நமோ டிவி தேர்தலுக்கு பின்னர் காணமல் போய்விட்டது.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர கட்சிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டுவந்தன. அதில் பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உள்ள 'ந' 'மோ' என்ற இரு எழுத்துகளை எடுத்து நமோ டிவி என்ற பெயரில் தொடங்கியது. இந்த டிவியில் பாஜக மற்றும் மோடியின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நிகழ்சிகள் ஒளிபரப்பப் பட்டது.

namo tv stopped

மோடி கலந்து கொண்ட ஊர்வலங்கள், தேர்தல் பிரச்சார நிகழ்வுகள் என அனைத்துமே ஒளிபரப்ப பட்டது. அதோடு மோடியின் சாதனைகளும் இதில் ஒளிபரப்பப் பட்டது. இந்த டிவி டாடா ஸ்கை, வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட பல டிடிஎச் சேவை நிறுவனங்கள் மூலம் இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த டிவி ஆரம்பிக்கப் பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின், வாக்கு வங்கி அரசியல் கட்சிகள் இதுபோல தொலைக்காட்சிகளை தொடங்கலாமா எனவும் இத்தொலைக்காட்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டதா எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

இதனையடுத்து வாக்குப் பதிவுக்கு முன்னர் நடைமுறையில் இருக்கும் 48 மணி நேர பிரச்சார ஒய்வு முறை இந்த டிவிக்கும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் கூறியது. தற்போது இந்த டிவி தனது ஒளிபரப்பை நிறுத்திக் கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய பாஜகவினர் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவின் பிரச்சாரத்திற்கான கருவியாகவே நமோ டிவி உருவாக்கப்பட்டது. தேர்தல் முடிந்தபிறகு அந்த தொலைக்காட்சிக்கான தேவை இல்லை என்பதால் அனைத்துப் பிரச்சாரப் பணிகளும் ஓய்வடைந்த மே 17ஆம் தேதியன்றே நமோ டிவியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறினார்.

உலகத்திலேயே.. எதுக்கு வம்பு, விடுங்க.

English summary
BJP has wound up Namo TV afer the LS polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X