டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் பாரபட்சத்தால் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூட்டான் நாட்டுக்கு ரூ.4,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுடனான நீர் மின்சார ஒத்துழைப்பு இரு நாட்டு உறவுக்கான முக்கிய அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூட்டான் பிரதமர்

பூட்டான் பிரதமர்

3 நாள் சுற்றுப் பயணமாக பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை இன்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக, பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா வந்த ஷெரிங்கிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி- ஷெரிங் ஆலோசனையின்போது, இரு நாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவி

ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவி

ஷெரிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தனது தேர்தல் வெற்றிக்கு முதன் முதலில், பாராட்டு தெரிவித்தது இந்திய பிரதமர் மோடிதான் என்றும், பூட்டான் நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியா அளித்து வரும் தொடர் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பூட்டானுக்கு இந்தியா செய்துள்ள நிதி உதவி அந்த நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கானது. 2022ம் ஆண்டுவரை இந்த ஐந்தாண்டு திட்டம் செயல்பாட்டில் இருக்கும்.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

இப்படியெல்லாம் பூட்டான் பிரதமருக்கு மரியாதை கொடுத்து, நிதி உதவியையும் வாரி வழங்கியுள்ள மோடி அரசு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு வேளாண் துறை மூலம் வழங்கியுள்ள நிதி ரூ.173 கோடி மட்டுமே என்பதுதான் அதிர்ச்சியில் உச்சம். கஜா மத்திய அரசு தனது ஒவ்வொரு துறை சார்பில் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது தெரிந்ததே. ஏற்கனவே மின்சார துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குறைந்த தொகை

குறைந்த தொகை

ஆனால், தென்னை, பலா, முந்திரி என வாழ்வாதார மரங்களை டெல்டா விவசாயிகள் இழந்துவிட்ட நிலையில், வேளாண்துறை வெறும் ரூ.173 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, விவசாயிகளை அவமதிப்பதை போன்ற செயல். 20 ஆண்டுகள் பின் தங்கிப் போய்விட்ட டெல்டா மாவட்டங்களுக்கு சோளப்பொரியை தூவிவிட்டு, பூட்டானின் ஐந்தாண்டு திட்டத்திற்கு, அள்ளிக்கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.

English summary
Prime Minister Narendra Modi Friday announced a Rs 4,500 crore financial assistance to Bhutan for its 12th five-year plan after holding wide-ranging talks with his Bhutanese counterpart Lotay Tshering while alloting RS.173 crores to Gaja affected area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X