• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சிபிஐ இயக்குநர்.. மத்திய அரசு பரிந்துரைத்த 2 பெயர்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய சிபிஐ இயக்குனர் பதவிக்கு, மத்திய அரசு பரிந்துரைத்த இரண்டு பெயர்களை விதிமுறைகளை காரணம் காட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 4ம் தேதியில் இருந்து சிபிஐ இயக்குனர் பதவி காலியாக இருக்கிறது. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா ஓய்வுபெற்ற பிறகு யாரையும் அந்த பதவிக்கு நியமிக்கவில்லை. அதற்கு, பதிலாக கூடுதல் பொறுப்பாக கூடுதல் இயக்குனர் பிரவீன் சின்ஹா அந்த பதவியை வகித்து வருகிறார்.

இன்று முடியும் காலக்கெடு.. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்ள தயார்.. பேஸ்புக் அறிவிப்பு! இன்று முடியும் காலக்கெடு.. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ஏற்றுக்கொள்ள தயார்.. பேஸ்புக் அறிவிப்பு!

இந்த நிலையில்தான் புதிய சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர், திங்கள்கிழமையான நேற்று நேற்று ஒன்று கூடி சுமார் 90 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

2 பெயர்களை முன்மொழிந்த மோடி

2 பெயர்களை முன்மொழிந்த மோடி

சிபிஐ இயக்குனரை தேர்ந்தெடுக்கும்போது, விதிமுறைகளின்படி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பதால் இந்த கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் எல்லை பாதுகாப்பு படை தலைவராக இருக்கும் ராகேஷ் அஸ்தானா மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தலைவர் ஒய்.சி. மோடி ஆகியோர் பெயர்கள் சிபிஐ இயக்குனர் பதவிக்கு முன்மொழியப்பட்டதாக, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. பணி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்கள் மேலே பணிக்காலம் இருப்பவர்களுக்குத்தான் சிபிஐ இயக்குனர் பதவியை தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருப்பதை ரமணா அப்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த இரு பெயர்களையும் மேற்கொண்டு பரிசீலிக்க முடியவில்லை என்று என்டிடிவி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

யார் இந்த ராகேஷ் அஸ்தானா

யார் இந்த ராகேஷ் அஸ்தானா

ராகேஷ் அஸ்தானா, பதவிகாலம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒய்.சி.மோடி பதவி காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். 2018ல் சிபிஐ இயக்குநராக அலோக் குமார் வர்மா பதவி வகித்தபோது, சிறப்பு இயக்குநராக பதவி வகித்தவர் ராகேஷ் அஸ்தானா. ஆனால், இருவரும் ஒருவொருக்கு ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறி மோதல் போக்கில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு உயரதிகாரிகளையும், கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்தது. இதன்பிறகு, சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா, சிபிஐ இணை இயக்குநர் அருண் குமார் சர்மா, சிபிஐ டிஐஜி மணீஷ் குமார் சின்ஹா, சிபிஐ கண்காணிப்பாளர் ஜெயந்த் ஜே.நாயக்நவாரே ஆகியோரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியிருந்தது.

3 பெயர்கள் பரிசீலனை

3 பெயர்கள் பரிசீலனை

இதனிடையே, இப்போது மூன்று பெயர்கள் மட்டும்தான் சிபிஐ இயக்குனர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவின் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சாஸ்திர சீமா பால் (எஸ்.எஸ்.பி) பிரிவின் இயக்குநர் ஜெனரல் கே.ஆர். சந்திரா, மற்றும் உள்துறை அமைச்சக சிறப்பு செயலாளர் வி.எஸ்.கே. கவுமுடி ஆகியோர்தான் பட்டியலில் உள்ள அதிகாரிகள். சீனியரான ஜெய்ஸ்வால் இந்த லிஸ்டில் முன்னணியில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

சுபோத் ஜெய்ஸ்வால் மகாராஷ்டிர கேடரின் 1985 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியாகும். தற்போது சி.ஐ.எஸ்.எஃப் தலைவராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய பிரிவுக்கு அவர் அழைக்கப்படுவதற்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் மற்றும் மகாராஷ்டிரா டிஜிபி பதவிகளை வகித்தார். சிபிஐ அமைப்பில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இல்லை என்றாலும், அவர் புலனாய்வுப் பணியகம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) ஆகியவற்றில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார்.

மகாராஷ்டிரா கேடர் அதிகாரி

மகாராஷ்டிரா கேடர் அதிகாரி

மகாராஷ்டிராவில், சர்ச்சையை கிளப்பிய, தெல்கி ஊழல் குறித்து ஜெய்ஸ்வால் விசாரணை நடத்தினார், பின்னர் இது சிபிஐ வசம்போனது. மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையில் பணியாற்றியுள்ளார். பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசில் 2018ல் மும்பை போலீஸ் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் மகாராஷ்டிரா டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். அவரது மேற்பார்வையின் கீழ் தான் எல்கர் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் வன்முறை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் மத்திய பணிக்கு அழைக்கப்பட்டார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி

இதனிடையே, இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். கடந்த 11ம் தேதி மொத்தம் 109 பெயர் பரிசீலனையில், இருந்ததாகவும் ஆனால் ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக 6 பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர் என்றும் கூறியுள்ளார். மத்திய பணியாளர் பயிற்சித் துறை அவர்கள் இஷ்டத்துக்கு பெயர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இயக்குனரை தேர்வு செய்யும் குழு தான் இதை தேர்வு செய்ய வேண்டும். மத்திய பணியாளர் பயிற்சித் துறை இதை செய்யக்கூடாது. என்று தெரிவித்தார்.

English summary
Chief justice of India N.V. Ramana reportedly rejected two names cited a rule in a panel meeting chaired by prime minister Narendra Modi to select a new director for the Central bureau of investigation CBI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X