டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்வானி காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி.. நாடாளுமன்ற குழு தலைவரானதும் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மோடி அதிரடி உரை

    டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடி, மூத்த தலைவர்களான அத்வானி, ஜோஷி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

    Narendra Modi elected as the leader of the NDA

    இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமராக மோடியை தேர்வு செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என்றார். இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்றும் அவர் கூறினார்.

    முதலமைச்சர் பழனிசாமி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் மோடிக்கு பூங்கொடுத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி, பிரதமராவதற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

    வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். அன்றைய நாளில் அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் என கூறப்படுகிறது.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP President Amit Shah: I thank all the allies and the MPs who have unanimously chosen NDA's leader Narendra Modi as the new Prime Minister of the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X