டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய பெருங்கடல் பகுதி நாடுகள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும்.. ஆர்எஸ்எஸ் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை 'இந்தியாவின் தந்தை' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்ணித்ததில் இருந்தே, ஒரு புதிய சர்ச்சை தொடங்கியுள்ளது.

இந்த சர்ச்சையில் ஆர்எஸ்எஸ்சும் இப்போது களமிறங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் இதுதொர்பாக அளித்துள்ள பேட்டியை பாருங்கள்.

Narendra Modi in father of new India: RSS

70 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 72 ஆண்டுகளாகவே, எந்த ஆதாரமும் இல்லாமல் காந்தி பழைய தேசத்தின் தந்தை என்று கருதினோம். இப்போது அதை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள். அது உங்கள் விருப்பம்.

இந்தியாவுக்கு ஒரு புதிய தந்தை உருவாகியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மோடிதான் புதிய இந்தியாவின் தந்தை என்று கூறினார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் யாருடன் போராடுவீர்கள்? சில நேரங்களில் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் உருவாகும்போது, 350 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சுற்று பகுதி பிராந்தியம் ஏன் ஒரு வலுவான அமைப்பாக உருவாக முடியாது? இந்தியப் பெருங்கடலுடன் தொடர்புடைய நாடுகளுக்கிடையிலான உறவு பண்டைய காலங்களிலிருந்தே உள்ளது. இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இந்தியா என்று அழைக்கப்பட்டன, இப்போது மீண்டும் அவை அனைத்தும் சேர்ந்து, இந்தியா என்று அழைக்கப்படும் நேரம் வந்துவிட்டது.

இது புதிய இந்தியா, வன்முறை, படுகொலை, மத பாகுபாடு, பெண்களைச் சுரண்டல் இல்லாமல் விடுதலையின் பாதையைக் காண்பிப்பது, ஆகியவை நடைபெறும் இந்தியா இது. உலகமே ஒரே குடும்பம் என நம்பும் இந்தியா இது. 8 கோடி பெண்கள் முத்தலாக் விவாகரத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போல, பல கோடி முஸ்லிம்களை அழிவிலிருந்து காப்பாற்றப்போகும் இந்தியா இது.

இப்போது அறிவிப்பு இல்லை.. தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான்.. சி.பி ராதாகிருஷ்ணன் ஷாக்கிங்!இப்போது அறிவிப்பு இல்லை.. தமிழக பாஜகவிற்கு கூட்டுத்தலைமைதான்.. சி.பி ராதாகிருஷ்ணன் ஷாக்கிங்!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி நாட்டை ஒன்றிணைத்துள்ளோம். எனவேதான், நவீன இந்தியாவின் தந்தை என பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை 'இந்தியத் தந்தை' என்று அழைத்ததற்கு, ஒவைசி அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தார். ஓவைசி கூறுகையில், "அதிபர் டிரம்பிற்கு இந்திய சுதந்திர ஆண்டு குறித்து எந்த விவரமும் தெரியாது. அவர் மோடிக்கு இப்படி ஒரு பட்டம் கொடுக்கிறார். பிரதமர் மோடி தேசத்தின் தந்தையாக இருக்க முடியாது, ஏனெனில் மகாத்மா காந்தி இந்த பட்டத்தை வகித்துக்கொண்டிருக்கிறார். தேச தந்தையுடன் மோடியை ஒப்பிட முடியாது. ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் போன்ற மூத்த தலைவர்களுக்கு கூட இந்த பட்டம் வழங்கப்படவில்லை" என்று ஒவைசி கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியைப் பாராட்டியதாகவும், அதில் யாராவது பெருமைப்படவில்லை என்றால், அவருக்கு இந்தியர் என்று அழைக்க உரிமை இல்லை என்று மத்திய அமைச்சர், டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருந்தார். "இந்த பட்டம் மீது காங்கிரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அவர்கள் டொனால்ட் டிரம்புடன் பேச வேண்டும். பிரதமரை கவுரவிக்கும் வார்த்தைகளில் காங்கிரஸ் பெருமிதம் கொள்ளவில்லை. அப்படி யாராவது பெருமிதம் கொள்ளாவிட்டால், அவர்களுக்கு இந்தியர் என்று அழைக்கப்படுவதற்கான உரிமை இல்லை. "அவர் கூறினார்,

English summary
RSS leader Indresh Kumar is believed Narendra Modi in father of new India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X