டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் வீரர்கள் மரணம்.. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டை மோடி ஏன் இப்போது எதிர்க்கவில்லை?: ஓவைசி

Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் 9 இந்திய ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்துள்ள நிலையில், 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இப்போது எந்த கருத்தும் கூறவில்லை என்று, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் தலைவர் அசாதுதின் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தரில் தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையின்போது, இந்தியாவைச் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்

இந்த நிலையில்தான், அக்டோபர் 24ம் தேதி, இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

2 விஷயங்கள்

2 விஷயங்கள்

இதுகுறித்து அசாதுதின் ஓவைசி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி சீனாவைப் பற்றி பேச பயப்படுகிறார். சீனா பெயர் தவறியும் வாயிலிருந்து வந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார். இரண்டு விஷயங்களில் நமது பிரதமர் வாய் திறப்பதில்லை. ஒன்று பெட்ரோல் மற்றும் டீசல் பணவீக்கம் மற்றொன்று சீனாவின் ஊடுருவல்.

சீனா ஊடுருவல்

சீனா ஊடுருவல்

சீனா நம் நாட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருக்கிறது. புல்வாமாவை பாகிஸ்தான் தாக்கியபோது, ​​நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து கொல்வோம் என்று மோடி சொன்னார். ஆனால் இப்போது சீனா டோக்லாமில் அமர்ந்திருக்கிறது. நமது பீகார் மக்கள் தாக்கப்பட்டனர், ஆனால் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்

நமது ராணுவ வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக, நாங்கள் இந்திய பிரதமரிடம் கேட்க விரும்புவது ஒன்றுதான். 24ம் தேதி இந்தியா பாகிஸ்தானுடன் டி 20 போட்டியில் விளையாடத் தயாராகி வருகிறது. "எல்லையில் இந்திய வீரர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், மன்மோகன் சிங்கின் அரசாங்கம் பாகிஸ்தானுக்கு பிரியாணி ஊட்டுகிறது" என்று நீங்கள் முன்பு சொல்லவில்லையா? இன்று பாகிஸ்தான் இந்தியாவின் ஏழைகளின் வாழ்க்கையுடன் காஷ்மீரில் விளையாடுகிறது. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். அமித் ஷா, காஷ்மீரில் என்ன செய்கிறார்?

Recommended Video

    India VS China | India-விடமிருந்து Bhutan-ஐ தன் பக்கம் இழுக்கும் China | Oneindia Tamil
    கொள்கை இல்லை

    கொள்கை இல்லை

    பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களை அனுப்புகிறார்கள். பயங்கரவாதத்தை சமாளிக்க உங்களுக்கு கொள்கை இல்லை. காஷ்மீரில் கொலைகள் நடப்பதை சமாளிக்க உங்களுக்கு எந்த கொள்கையும் இல்லை. ஜம்மு -காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பிஹாரி தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், கடந்த 15 நாட்களில், பயங்கரவாதிகள் 13 பொதுமக்களை கொலை செய்துள்ளனர். பிற மாநில தொழிலாளர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இவ்வாறு அசாதுதின் ஓவைசி தெரிவித்தார்.

    English summary
    A cricket match between India and Pakistan is set to take place in the 20-over World Cup, with 9 Indian soldiers killed in a terrorist attack on the border. Asaduddin Owaisi, leader of the AIMIM, has criticized Prime Minister Narendra Modi for not saying anything now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X